Oct 16, 2026
Thisaigal NewsYouTube

பல்வேறு பகுதிகளில் திடீர் வெள்ளம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பல்வேறு பகுதிகளில் திடீர் வெள்ளம்

நவ. 27-

கோலாலம்பூர் மாநகரில் இன்று மாலையில் பெய்த கனத்த மழையில் பல்வேறு பகுதிகளில் திடீர் வெள்ளம் ஏற்பட்டு பாதசாரிகளும், வாகமோட்டிகளும் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.

மாலை 6.30 மணிக்கு பெய்யத் தொடங்கிய கடும் மழை, சில மணி நேரம் நீடித்த போதிலும் கோலாலம்பூர் மாநகரின் பிரதான சாலைகளில் வெள்ளம் கரைப்புரண்டோடியதாக கோலாலம்பூர் மாநகர் மன்றம் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்த படங்களில் தெரியவந்துள்ளது.

இதில் ஜாலான் கூச்சிங்கிலிருந்து சிகாம்புட்டிற்கு செல்லும் பிரதான சாலையில் முழங்கால் வரையில் வெள்ளம் கரைப்புரண்டோடியதால் பலர் பெரும் பரிதவிப்புக்கு ஆளாகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →