Jul 30, 2026
Thisaigal NewsYouTube
முன்னாள் போலீஸ் அதிகாரி உள்பட மூவர் மீது தாயார் போலீசில் புகாரளித்தார்
தற்போதைய செய்திகள்

முன்னாள் போலீஸ் அதிகாரி உள்பட மூவர் மீது தாயார் போலீசில் புகாரளித்தார்

Share:
சிலாங்கூர், ஜுலை 13-டிக்டாக் பிரபலமான ESHA என அறியப்படும் 30 வயது அ.ராஜேஸ்வரி எனும் பெண் இணையப் பகடிவதையால் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவத்தில், அவருக்கு டிக்டாக்கில் மிரட்டல் விடுத்ததாக கூறப்படும் முன்னாள் போலீஸ் அதிகாரி உள்பட மூவர் மீது அவரது தாயார் புஷ்பா போலீசில் புகாரளித்துள்ளார்.

56 வயதுடைய அம்மாது, நேற்று மாலை மணி 6.34 அளவில், சிலாங்கூர், செலாயாங் போலீஸ் நிலையத்தில், அந்த புகாரை அளித்ததாக, கோம்பாக் மாவட்ட போலீஸ் தலைவர் ACP NOOR ARIFFIN MOHAMAD NASIR தெரிவித்தார்.

ESHA-வின் வீடு, GOMBAK SETIA மக்கள் வீடமைப்பு திட்டம் - PPR-ரில் உள்ளதால், அம்மாதுவின் புகார் நேரடியாக செதாபாக் போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக NOOR ARIFFIN கூறினார்.

முன்னதாக, நேற்று தனது மருமகனுடன் கோம்பாக் மாவட்ட போலீஸ் தலைமையத்திற்கு வந்திருந்த ESHA-வின் தாயார், போலீசிடம் புகாரளித்த பிறகு, இரவு மணி 8 மணி வரையில் விசாரணை அதிகாரியிடம் விளக்கம் அளித்தார்.

அதன் பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய புஷ்பா, தனது மகளைப் பற்றி டிக்டாக் நேரலையில் அவதூறாக பேசியவர்களின் பல காணொளிகள் ஆதாரங்களாக உள்ளதாக, கடந்த ஒரு வாரமாக சிலர், தம்மிடம் கூறிவருவதாக கூறினார்.

அவர்களில், முன்னாள் போலீஸ் அதிகாரியான ஒரு பெண், ESHA இதற்கு முன்பு போலிசாரால் கைது செய்யப்பட்டிருந்த விவகாரத்தை எழுப்பியிருந்ததாகவும் புஷ்பா குறிப்பிட்டார்.

தனக்கு எதிராக இணையப் பகடிவதை மேற்கொள்ளப்படுவதாக, டாங் வாங்கி போலீஸ் நிலையத்தில் புகாரளித்திருந்த ESHA, அதன் மறுநாளே தற்கொலை செய்துக்கொண்டது, நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

அவர் அளித்திருந்த புகார் செந்தூல் மாவட்ட போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டிருந்த நிலையில், இதுவரையில், இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்