Dec 3, 2025
Thisaigal NewsYouTube
நாய் மீது மோதிய கர்ப்பிணிப் பெண் மரணம்
தற்போதைய செய்திகள்

நாய் மீது மோதிய கர்ப்பிணிப் பெண் மரணம்

Share:

மோட்டார் சைக்கிளில் தனியொரு நபராக சென்ற 6 மாத கர்ப்பிணிப் பெண் ஒருவர், நாய் மீது மோதி உயிரிழந்தார்.

இச்சம்பவம் இன்று வியாழக்கிழமை நள்ளிரவு 12 மணியளவில் தம்பின், ஜாலான் கெரு - பத்து பெலாங் சாலையில் நிகழ்ந்தது. கடுமையான காயங்களுடன் தம்பின் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அந்த கர்ப்பிணைப் பெண், சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று அதிகாலை 2.35 மணியளவில் உயிரிழந்தார்.

35 வயதான அந்த மாது, ஜாலான் தம்பின் - ஜெமாஸ்சாலையில் உள்ள ஓர் உணவகத்திலிருந்து தம்பின், கம்போங் கெரு ஹுலு என்ற இடத்தில் உள்ள தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நடந்ததாக தம்பின் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிதென்டன் அனுவால் தெரிவித்தார்.

Related News