Oct 16, 2026
Thisaigal NewsYouTube

நான்கு மாநிலங்களில் தொடர்ந்து மழை பெய்யும்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
நான்கு மாநிலங்களில் தொடர்ந்து மழை பெய்யும்

டிச.16-

இன்று முதல் வரும் வியாழக்கிழமை வரை நான்கு மாநிலங்களில் தொடர்ந்து மழை பெய்யும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையமான METMALAYSIA எச்சரிக்கை விடுத்துள்ளது.

METMALAYSIA வெளியிட்டுள்ள அறிக்கையில், பகாங், பேரா, கிளந்தான், திரங்கானூ ஆகிய மாநிலங்களில் தொடர்ந்து மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவித்துள்ளது.

பகாங்கில் Jerantut, Maran, Kuantan, Pekan , Rompin உள்ளிட்ட பல மாவட்டங்களிலும், பேராவின் உலு பேரா மாவட்டத்திலும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன், வானிலை ஆய்வுத்துறை கிழக்கு கடற்கரைப் பகுதிகள் உட்பட ஏழு மாநிலங்களில் தொடர்ந்து மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தது.

நவம்பர் முதல் மார்ச் வரையிலான வடகிழக்கு பருவமழை காலத்தில் கிழக்கு கடற்கரை மாநிலங்களில் தொடர்ந்து மழை பெய்யும் அபாயம் அதிகம் எனவும் METMALAYSIA குறிப்பிட்டுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →