Sep 9, 2026
Thisaigal NewsYouTube
பேராக் பாரிட் தோக் ஹின் நீர் வாயிலில் தென்பட்ட ராட்சஷ முதலை - பொதுமக்கள் அச்சம்
தற்போதைய செய்திகள்

பேராக் பாரிட் தோக் ஹின் நீர் வாயிலில் தென்பட்ட ராட்சஷ முதலை - பொதுமக்கள் அச்சம்

Share:

பேராக் மாநிலம் பாரிட் தோக் ஹின் நீர்வாயில் பகுதியில் சுமார் 6 மீட்டர் நீளமுள்ள முதலை தென்பட்டதாக தகவல் வெளியானதைத் தொடர்ந்து, அதிலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள பிரபல பான் பெச்சா குளியல் பகுதி ஆள்நடமாட்டமின்றி வெறிச்சோடியது.

கடற்கரையிலிருந்து 100 மீட்டருக்கும் குறைவான தூரத்தில் கடலில் முதலை நீந்திய காட்சிகள் பார்வையாளர்கள் மற்றும் மீன் பிடிப்பவர்களால் காணொளியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதனால், கடற்கரை மற்றும் நீர்ப்பகுதிகளில் பொதுமக்களின் பாதுகாப்பு குறித்து அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

மேலும், நீரில் பொதுமக்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், அதிகாரிகள் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி குடியிருப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த 2019-ஆம் ஆண்டில் தஞ்சோங் பியாண்டாங் முதல் கோலா கூலா வரை முதலை ஒன்று நீரில் சென்றதாகப் பதிவான சம்பவத்துக்குப் பிறகு, இப்பகுதியில் இது இரண்டாவது முதலை தென்பட்ட சம்பவம் என நம்பப்படுகிறது.

Related News