Dec 4, 2025
Thisaigal NewsYouTube
போர்த்துக்கீசியர்களின் ஃபியேஸ்தா சன் பெட்ரோ தேசிய கலாச்சாரப் பாரம்பரியமாக அங்கீகரிக்கப்படவிருக்கிறது
தற்போதைய செய்திகள்

போர்த்துக்கீசியர்களின் ஃபியேஸ்தா சன் பெட்ரோ தேசிய கலாச்சாரப் பாரம்பரியமாக அங்கீகரிக்கப்படவிருக்கிறது

Share:

கோலாலம்பூர், ஆகஸ்ட்.27-

மலாக்காவில் போர்த்துக்கீசிய சமூகத்தினரால் தொடர்ந்து கட்டிக் காக்கப்பட்டு வரும் ஃபியேஸ்தா சன் பெட்ரோ விழாவை தேசிய கலாச்சார பாரம்பரியங்களில் ஒன்றாக சுற்றுலா, கலை, கலாச்சார அமைச்சு அங்கீகரிக்கவிருக்கிறது.

போர்த்துக்கீசிய சமூகத்தின் இசை, நடனம், பாணி, உணவு, அலங்காரம், மொழி மற்றும் கலை போன்ற கலாச்சார பாரம்பரியத்தின் பல்வேறு கூறுகளை, அவர்களின் ஃபியேஸ்தா சன் பெட்ரோ விழா பிரதிபலிக்கிறது என்று சுற்றுலா, கலை, கலாச்சார அமைச்சர் டத்தோ ஶ்ரீ தியோங் கிங் சிங் தெரிவித்தார்.

கடந்த 1511 ஆம் ஆண்டு முதல் 1641 ஆம் ஆண்டு வரை சுமார் 130 ஆண்டுகள் மலாக்காவை ஆட்சி செய்த போர்த்துக்கீசியர்கள் விட்டுச் சென்ற கலாச்சாரங்கள், அவர்களின் சந்ததினரால் இன்னமும் மலாக்கா செட்டில்மெண்டில் பேணிக் காக்கப்பட்டு வருகின்றன.

போர்த்துக்கீசியர்களின் கலாச்சார அடையாளமாகவும், சமூகத் தொடர் பாடலின் ஒரு வடிவமாகவும் விளங்கும் அவர்களின் Malhao பாரம்பரிய நாட்டுப்புற நடனமும், Jinkil Nona பாடலும் பிரசித்திப் பெற்றதாகும்.

ஃபியேஸ்தா சன் பெட்ரோ விழாவைத் தனித்துவமிக்க கலாச்சாரப் பாரம்பரியமாக அங்கீகரிக்கும்படி மலாக்காவில் உள்ள போர்த்துக்கீசிய சமூகம் விண்ணப்பம் ஒன்றைச் சமர்ப்பித்துள்ளது.

அந்த விண்ணப்பத்தைப் பரிசீலிக்க கடந்த ஜுலை 3 ஆம் தேதி தமது அமைச்சின் பாரம்பரியம் தொடர்பிலான நிபுணர்கள் ஒன்றுக்கூடி விவாதித்து இருப்பதாக நாடாளுமன்றத்தில் கோத்தா மலாக்கா எம்.பி. கூ போயே தியோங் எழுப்பிய கேள்விக்குப் பதில் அளிக்கையில் அமைச்சர் டத்தோ ஶ்ரீ தியோங் கிங் சிங் மேற்கண்டவாறு பதில் அளித்தார்.

Related News