ஈப்போ, செப்டம்பர்.04-
பேரா மாநில அளவில் கொண்டாடப்பட்ட தேசிய தின விழாவின் போது பேரா சுல்தான், சுல்தான் நஸ்ரின் ஷாவை, மாது ஒருவர் அணுகிய சம்பவத்திற்கு பேரா மாநில அரசாங்கம் தார்மீகப் பொறுப்பேற்பதாக மந்திரி பெசார் டத்தோ ஶ்ரீ சரானி முகமட் அறிவித்துள்ளார்.
எதிர்பாராமல் நிகழ்ந்த இந்தச் சம்பவத்திற்கு யாரையும் சுட்டிக் காட்டி குற்றஞ்சாட்ட பேரா மாநில அரசு விரும்பவில்லை. மாறாக, இந்தச் சம்பவத்திற்கு பேரா மாநில அரசு முழு பொறுப்பேற்கிறது என்று மந்திரி பெசார் குறிப்பிட்டார்.
இச்சம்பவம் தொடர்பாக மாநில ஆட்சிக்குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.








