Oct 13, 2026
Thisaigal NewsYouTube

ரமலான் சந்தையில் மானபங்கம்: ஆடவர் கைது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ரமலான் சந்தையில் மானபங்கம்: ஆடவர் கைது

தெமர்லோ, மார்ச்.13-

ரமலான் சந்தையில் கூட்ட நெரிசலைத் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு பெண்களை மானபங்கம் செய்து வந்ததாக நம்பப்படும் ஆடவர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பகாங், தெமர்லோ, லூரா செமந்தான் ரமலான் சந்தையில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் இந்த மானபங்கச் சம்பவங்கள் தொடர்புடைய காணொளி, சமூக வலைத்தளங்களில் பரவலாக வைரலானதைத் தொடர்ந்து அந்த சந்தேகப் பேர்வழி அடையாளம் காணப்பட்டதாக தெமர்லோ மாவட்ட போலீஸ் தலைவர் மஸ்லான் ஹாசான் தெரிவித்தார்.

முதல் சம்பவம் கடந்த மார்ச் 6 ஆம் தேதி நடந்துள்ளது. சந்தையில் நடந்து சென்று கொண்டிருந்த 26 வயது பெண்ணிடம் அந்த நபர் சில்மிஷம் செய்துள்ளார்.

அதன் பின்னர் கடந்த திங்கட்கிழமை 23 மற்றும் 27 வயதுடைய இரு பெண்களிடம் அதே நபர் பாலியல் சேட்டையில் ஈடுபட்டுள்ளார் என்று மஸ்லான் ஹாசான் குறிப்பிட்டார்.

மூன்று பெண்களும் அளித்த புகாரைத் தொடர்ந்து ஒரு வேலையற்ற 41 வயதுடைய நபரை போலீசார் கைது செய்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
கேஎல்ஐஏ பாதுகாப்பைக் கடந்து போதைப்பொருள் கடத்தலா? ஜப்பானில் 5 மலேசியர்கள் கைது: விளக்கம் கோரப்படும்- டத்தோ ஶ்ரீ சைஃபுடின்

கேஎல்ஐஏ பாதுகாப்பைக் கடந்து போதைப்பொருள் கடத்தலா? ஜப்பானில் 5 மலேசியர்கள் கைது: விளக்கம் கோரப்படும்- டத்தோ ஶ்ரீ சைஃபுடின்

மிரி–சுபாங் நேரடி விமானச் சேவை டிசம்பர் 1 முதல்! பயண நேரம் குறையும்; பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கம்

மிரி–சுபாங் நேரடி விமானச் சேவை டிசம்பர் 1 முதல்! பயண நேரம் குறையும்; பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கம்

எஸ்பிஆர்எம் உயர் அதிகாரி 3 லட்சத்து 50 ஆயிரம் ரிங்கிட் பெற்றதாகப் புகார்! போலீஸ் இரு கோணங்களில் விசாரணை

எஸ்பிஆர்எம் உயர் அதிகாரி 3 லட்சத்து 50 ஆயிரம் ரிங்கிட் பெற்றதாகப் புகார்! போலீஸ் இரு கோணங்களில் விசாரணை

முஸ்லிம் அல்லாத சமயச் சடங்கில் பங்கேற்றதாகக் கூறப்படும் முஸ்லிம் ஆடவர் கைது! மேலும் 14 பேரிடம் விசாரணை

முஸ்லிம் அல்லாத சமயச் சடங்கில் பங்கேற்றதாகக் கூறப்படும் முஸ்லிம் ஆடவர் கைது! மேலும் 14 பேரிடம் விசாரணை

ஸாஹிட் மீதான 47 குற்றச்சாட்டுகள்: பிரதமருக்கு மறுவழக்குத் தொடர உத்தரவிடும் அதிகாரம் இல்லை

ஸாஹிட் மீதான 47 குற்றச்சாட்டுகள்: பிரதமருக்கு மறுவழக்குத் தொடர உத்தரவிடும் அதிகாரம் இல்லை

பினாங்கில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும்! காற்றுத் தூய்மைக் குறியீடு 150-க்குக் கீழ்

பினாங்கில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும்! காற்றுத் தூய்மைக் குறியீடு 150-க்குக் கீழ்