Jul 29, 2026
Thisaigal NewsYouTube
முகைதீனின் மேல்முறையீட்டில் ஆகஸ்ட் 20 ஆம் தேதி தீர்ப்பு
தற்போதைய செய்திகள்

முகைதீனின் மேல்முறையீட்டில் ஆகஸ்ட் 20 ஆம் தேதி தீர்ப்பு

Share:

புத்ராஜெயா, ஜூலை 09-

அதிகார துஷ்பிரயோகம் மற்றும் லஞ்ச ஊழல் தொடர்பில் தமக்கு எதிராக நான்கு குற்றச்சாட்டுகளை நிலைநிறுத்தியிருக்கும் அப்பீல் நீதிமன்றத்தின் முடிவு மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என்று முன்னாள் பிரதமர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின் செய்து கொண்ட மேல்முறையீட்டில் வரும் ஆகஸ்ட் 20 ஆ ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படவிருக்கிறது.

நாட்டின் பிரதமராக தாம் பொறுப்பில் இருந்த போது Jana Wibawa நிதித் திட்டத்தில் முறைகேடு மற்றும் அதிகார துஷ்பிரயோகம் செய்ததாக 23 கோடியே 25 லட்சம் வெள்ளி தொடர்பில் நான்கு குற்றச்சாட்டுகளை முகைதீன் யாசின் எதிர்நோக்கியுள்ளார்.

தமக்கு எதிரான நான்கு குற்றச்சாட்டுகளையும் ரத்து செய்து, அக்குற்றச்சாட்டுகளிலிருந்து தம்மை விடுதலை செய்து இருக்கும் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு நிலைநிறுத்தப்பட வேண்டும் என்று பெரிக்காத்தான் நேஷனல் தலைவருமான முகைதீன், தமது மேல்முறையீட்டில் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்