Oct 14, 2026
Thisaigal NewsYouTube

கும்பமேளாவில் பக்தர்கள் நீராடும் வீடியோ விற்பனை: கும்பலை கைது செய்ய பேஸ்புக் உதவியை நாடிய போலீசார்

திசைகள் செய்திப்பிரிவு
Share:

மஹா கும்பமேளாவில் பெண்கள் குளிப்பதைப் போன்ற வீடியோக்கள் விற்பனை செய்து வரும் நபர்களுக்கு கடும் தண்டனை வழங்க, சமூக வலைத்தள நிறுவன உதவியை போலீசார் நாடியுள்ளனர்.

உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் கும்பமேளா வெகு விமரிசையாக நடக்கிறது. நாடு முழுதும் இருந்து கோடிக்கணக்கான பக்தர்கள் கங்கையில் புனித நீராடி வருகின்றனர். வரும், 26ம் தேதி வரை நடக்கிறது. இதுவரை, 55 கோடிக்கும் மேற்பட்டோர் புனித நீராடியுள்ளனர். இந்நிலையில் திரிவேணி சங்கமத்தில் பெண்கள் குளிப்பதை வீடியோவாக எடுத்து சிலர் விற்பனை செய்து வருகின்றனர் என புகார்கள் வந்துள்ளன.

புகாரின் அடிப்படையில் இன்ஸ்டாகிராமில் பயனர் ஒருவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பிப்ரவரி 19ம் தேதி டெலிகிராம் சேனலில் பெண்கள் குளிக்கும் வீடியோக்களை விற்பனை செய்து வருவது கண்டறியப்பட்டது.

மஹா கும்பமேளாவில் பெண்கள் குளிப்பதைப் போன்ற ஆட்சேபனைக்குரிய வீடியோக்களை வெளியிட்டு விற்பனை செய்ததாகக் கூறப்படும் இரண்டு சமூக ஊடக கணக்குகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்ட நடவடிக்கைகள் துவங்கப்பட்டு உள்ளன. விசாரணை நடந்து வருகிறது.

பெண்கள் குளிப்பதைப் போலவும், உடை மாற்றுவதைப் போலவும் உள்ள வீடியோக்களை சில தளங்கள் பதிவேற்றுவது அவர்களின் தனியுரிமை மற்றும் கண்ணியத்தை மீறுவது ஆகும். தொழில்நுட்ப நிறுவனமான மெட்டாவிடம் இருந்து கணக்கு வைத்திருப்பவரின் அடையாளம் காண தகவல் கேட்டுள்ளோம். விவரங்கள் கிடைத்தவுடன் கைது உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கப்படும். குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் கூறினர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
1எம்டிபி வழக்கில் நஜிப்புக்கு மீண்டும் பின்னடைவு! 15 ஆண்டு சிறைத் தண்டனையை நிறுத்திவைக்க நீதிமன்றம் மறுப்பு

1எம்டிபி வழக்கில் நஜிப்புக்கு மீண்டும் பின்னடைவு! 15 ஆண்டு சிறைத் தண்டனையை நிறுத்திவைக்க நீதிமன்றம் மறுப்பு

கல்வியில் பின்தங்கிய தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கத் தொழில்திறன் பயிற்சி! பேராக் அரசு ஆதரவு – டத்தோ சிவநேசன்

கல்வியில் பின்தங்கிய தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கத் தொழில்திறன் பயிற்சி! பேராக் அரசு ஆதரவு – டத்தோ சிவநேசன்

ஊடகவியலாளர்களுக்கு இரண்டாவது முறையாக தீபாவளி உபசரிப்பு! அரசியல் இளைஞர் பிரிவுகளில் ஜசெக.வின் டாப்சி முன்னெடுப்பு – வூ கா லியோங்

ஊடகவியலாளர்களுக்கு இரண்டாவது முறையாக தீபாவளி உபசரிப்பு! அரசியல் இளைஞர் பிரிவுகளில் ஜசெக.வின் டாப்சி முன்னெடுப்பு – வூ கா லியோங்

நாடாளுமன்ற சேவைகள் மன்றத்தில் ஆளும் தரப்புக்கும் எதிர்க்கட்சிக்கும் தலா 2 எம்.பி.க்கள் நியமனம்

நாடாளுமன்ற சேவைகள் மன்றத்தில் ஆளும் தரப்புக்கும் எதிர்க்கட்சிக்கும் தலா 2 எம்.பி.க்கள் நியமனம்

நேபாள வெள்ளத்தில் மாயமான 54 மலேசியர்களின் குடும்பங்களுக்கு 6 மாதக் கடன் தவணை ஒத்திவைப்பு! பிரதமரைச் சந்திக்க மீண்டும் கோரிக்கை

நேபாள வெள்ளத்தில் மாயமான 54 மலேசியர்களின் குடும்பங்களுக்கு 6 மாதக் கடன் தவணை ஒத்திவைப்பு! பிரதமரைச் சந்திக்க மீண்டும் கோரிக்கை

3 வயது சிறுவனை மனிதக் கழிவை உண்ணக் கட்டாயப்படுத்தியவருக்கு 8 ஆண்டு 6 மாதம் சிறை

3 வயது சிறுவனை மனிதக் கழிவை உண்ணக் கட்டாயப்படுத்தியவருக்கு 8 ஆண்டு 6 மாதம் சிறை