Oct 10, 2026
Thisaigal NewsYouTube

லஞ்சம் பெற்றதாக மேலவை முன்னாள் துணை சபாநாயகர் மீது குற்றச்சாட்டு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
லஞ்சம் பெற்றதாக மேலவை முன்னாள் துணை சபாநாயகர் மீது குற்றச்சாட்டு

ஷா ஆலாம், ஜூன்.18-

துணை குத்தகை நிறுவனம் ஒன்றின் இயக்குநரிடமிருந்து 2 லட்சத்து 35 ஆயிரம் ரிங்கிட்டை லஞ்சமாகப் பெற்றது மற்றும் மூன்று ஆடம்பரக் கார்களை இலவசமாகப் பெற்றது தொடர்பில் நாடாளுமன்ற மேலவையின் முன்னாள் துணை சபா நாயகர் டத்தோ ஶ்ரீ முகமட் அலி முகமட், ஷா ஆலாம், செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.

ஊழல் நடவடிக்கைக்குத் துணை நிற்க பிஎம்டபள்யு, லேன் ரோவர் மற்றும் பென்ட்லி ஆகிய ஆடம்பரக் கார்களை லஞ்சமாகப் பெற்றதாக டத்தோ ஶ்ரீ முகமட் அலி மீது குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டுள்ளது.

மலாக்கா, மலாக்கா தெங்கா மாவட்டத்திற்கு உட்பட்ட கோத்தா லக்சமனா கடலோரப் பகுதியில் 100 ஏக்கர் நிலப் பரப்பில் 4 கோடியே 50 லட்சம் ரிங்கிட் மதிப்பிலான கடல் நில மீட்புத் திட்டத்தை மேற்கொள்ளவதற்கு பெனலேக் சென்டிரியான் பெர்ஹாட் நிறுவனத்தின் இயக்குநர் லியாவ் செங் ஹாய் என்பவரிடம் லஞ்சம் பெற்றதாக 61 வயதுடைய அந்த முன்னாள் துணை சபாநாயகர் குற்றஞ்சாட்டப்பட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →