Sep 28, 2026
Thisaigal NewsYouTube
சிறுமிக்கு பாலியல் தொல்லை: ஒரு மாணவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்; இருவர் விசாரணை கோரினர்
தற்போதைய செய்திகள்

சிறுமிக்கு பாலியல் தொல்லை: ஒரு மாணவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்; இருவர் விசாரணை கோரினர்

Share:

ஜோகூர், பத்து பகாட்டில் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், 16 வயது மாணவர் ஒருவர் இன்று மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

கடந்த மார்ச் 27-ஆம் தேதி பத்து பகாட், தொங்காங் பெச்சாவிலுள்ள ஒரு கட்டிடத்தின் பின்புறம் சம்பந்தப்பட்ட சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 15 மற்றும் 16 வயதுடைய மேலும் இரு மாணவர்கள் மீதும் குற்றம் சுமத்தப்பட்டது.

மாஜிஸ்திரேட் அருண் நோவல் தாஸ் முன்னிலையில் நிறுத்தப்பட்ட அவ்விருவரும் தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினர். இதனை தொடர்ந்து அவர்கள் தலா 1,500 ரிங்கிட் ஜாமீனில் விடுக்கப்பட்டனர்.

Related News

சிறுமிக்கு பாலியல் தொல்லை: ஒரு மாணவர் குற்றத்தை ஒப்புக்கொ... | Thisaigal News