Sep 26, 2026
Thisaigal NewsYouTube
15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்
தற்போதைய செய்திகள்

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்

Share:

கோம்பாக்கில் செயல்பட்டு வரும் குழந்தைகள் நல காப்பகம் ஒன்றின் நிர்வாகி, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, 15 வயது சிறுவனிடம் இயற்கைக்கு முரணான வகையில் பாலியல் செயலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

எஸ்.வேலன் என்ற 31 வயதான அந்நபர் மூன்றாவது முறையாக நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படும் நிலையில், அவர் மீது சுமத்தப்பட்டுள்ள மொத்த குற்றச்சாட்டுகளின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளன.

இந்நிலையில், கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி சுஹைலா ஹாரூன் முன்னிலையில் ஆஜரான வாலன், தன் மீதான இரண்டு புதிய குற்றச்சாட்டுகளையும் மறுத்து விசாரணை கோரினார்.

கடந்த மாதம், சிறார்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகம், இயற்கைக்கு முரணான பாலியல் உறவு உள்ளிட்ட நான்கு குற்றச்சாட்டுகள் வேலன் மீது சுமத்தப்பட்டன.

மேலும், பத்து மலையில் தமன் பெர்மாடா பீரு பகுதியில் பதிவு செய்யப்படாத குழந்தைகள் பராமரிப்பு மையத்தை இயக்கியதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இந்த அனைத்து குற்றச்சாட்டுகளையும் வாலன் மறுத்து விசாரணை கோரியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News