புக்கிட் மெர்தாஜாம், டிசம்பர்.05-
சோனா குளியல் என்ற போர்வையில் ஓரினப்புணர்ச்சி நடவடிக்கை தொடர்பில் பிடிபட்ட 7 ஆண்கள், பினாங்கு, புக்கிட் மெர்தாஜாம், மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டனர்.
ஓரினப்புணர்ச்சிக்கு வழிவிடுவதற்கு தனது சோனா குளியல் மையத்தை ஆண்களுக்குத் திறந்து விட்ட அதன் உரிமையாளருக்கு நீதிமன்றம் 8 ஆயிரம் ரிங்கிட் அபராதம் விதித்தது.
பினாங்கு பண்டார் பிறை ஜெயாவில் உள்ள தனது சோனா மையத்தைக் கடந்த நவம்பர் 29 ஆம் தேதி ஒழுங்கீன நடவடிக்கைக்காக ஆண்களுக்குத் திறந்து விட்ட குற்றத்தை ஒப்புக் கொண்ட 57 வயது உரிமையாளர் கோர் யிக் கியான் என்பருக்கு நீதிமன்றம் 8 ஆயிரம் ரிங்கிட் அபராதம் விதித்தது.
எச்.ஐ.வி. நோய் பரவும் அபாயத்திற்கு துணை நின்றதாக அந்த உரிமையாளர் மீது குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டது. பிடிபட்ட இதர அறுவருக்கு எதிராக இதே தன்மையில் குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டது.








