Jun 25, 2026
Thisaigal NewsYouTube
அட்டர்னி ஜெனரல் - அரசு தரப்பு வழக்கறிஞர் பதவிகளை பிரிக்கும் மசோதா: மே 18-க்குள் முடிவு
தற்போதைய செய்திகள்

அட்டர்னி ஜெனரல் - அரசு தரப்பு வழக்கறிஞர் பதவிகளை பிரிக்கும் மசோதா: மே 18-க்குள் முடிவு

Share:

கோலாலம்பூர், 05-

அட்டர்னி ஜெனரல் மற்றும் அரசு தரப்பு வழக்கறிஞர் பதவிகளைப் பிரிப்பதற்கான அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான நாடாளுமன்ற சிறப்புத் தேர்வுக் குழு, சம்பந்தப்பட்ட மசோதாவை விரைவில் முடிவு செய்வதை இலக்காகக் கொண்டுள்ளது.

முன்பு ஒப்புக் கொள்ளப்பட்ட பரிந்துரைகள் மீதான மேலதிக ஆய்வுக்குப் பிறகு இந்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக சட்ட சீர்திருத்தங்களுக்கான பிரதமர் துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ அஸாலினா ஒத்மான் சையிட் இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

வரும் மே 18-ஆம் தேதி நடைபெறவுள்ள இறுதி கூட்டத்திற்கு முன்பாக, பரிந்துரைக்கப்பட்ட திருத்தங்களை உள்ளடக்கிய அறிக்கையுடன் மசோதாவையும் முடிவு செய்வது அக்குழுவின் நோக்கமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இன்று தாம் தலைமை தாங்கிய ஐந்தாவது குழுக் கூட்டத்தில், மசோதாவை வரைவு செய்வதில் கவனம் செலுத்தியதாகவும் அஸாலினா குறிப்பிட்டுள்ளார்.

Related News

ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் திருவாசகம் ஓதுதல்

ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் திருவாசகம் ஓதுதல்

ஜோகூர் தேர்தல்: ஊழல் புகார்களைப் பதிவு செய்ய 5 கட்டுப்பாட்டு அறைகளைத் திறந்தது எஸ்பிஆர்எம்

ஜோகூர் தேர்தல்: ஊழல் புகார்களைப் பதிவு செய்ய 5 கட்டுப்பாட்டு அறைகளைத் திறந்தது எஸ்பிஆர்எம்

ஜோகூர் தேர்தல்: ஸ்கூடாய் தொகுதியில் பிஎஸ்எம் கட்சியின் ஒரே வேட்பாளர் அமீர் ஷஃபிக் போட்டி

ஜோகூர் தேர்தல்: ஸ்கூடாய் தொகுதியில் பிஎஸ்எம் கட்சியின் ஒரே வேட்பாளர் அமீர் ஷஃபிக் போட்டி

கெடா ஜேபிஜே அதிகாரி எனக்கூறி நூதன மோசடி: லொக்மான் இப்ராஹிம் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கை

கெடா ஜேபிஜே அதிகாரி எனக்கூறி நூதன மோசடி: லொக்மான் இப்ராஹிம் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கை

ஜோகூர் தேர்தல்: வேட்பாளராகத் தேர்வாகாத போது விசுவாசம் சோதிக்கப்படும் - அஸாலினா ஒத்மான் கருத்து

ஜோகூர் தேர்தல்: வேட்பாளராகத் தேர்வாகாத போது விசுவாசம் சோதிக்கப்படும் - அஸாலினா ஒத்மான் கருத்து

மலேசிய சுற்றுலாக் காலம் 2026' திட்டத்திற்கு ஆதரவாக புதிய உள்நாட்டு சுற்றுலா பிரச்சாரம் கோலாலம்பூரில் தொடங்கப்பட்டுள்ளது.

மலேசிய சுற்றுலாக் காலம் 2026' திட்டத்திற்கு ஆதரவாக புதிய உள்நாட்டு சுற்றுலா பிரச்சாரம் கோலாலம்பூரில் தொடங்கப்பட்டுள்ளது.