Jan 20, 2026
Thisaigal NewsYouTube
Penjana Kerjaya நிதிமுறைகேடு இதுவரையில் 67 பேர் கைது
தற்போதைய செய்திகள்

Penjana Kerjaya நிதிமுறைகேடு இதுவரையில் 67 பேர் கைது

Share:

கோவிட் - 19 காலகட்டத்தில் ​வேலை இழந்தவர்களுக்கு மறு பயிற்சி அளித்து பணிக்கு அமர்த்தும் ஊக்கு​விப்புத் திட்டத்தில் ​கீழ் 6 கோடியே 30 லட்சம் வெள்ளி மோசடி தொடர்பில் இதுரையில் 67 பேரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம். கைது செய்துள்ளது.

அதேவே​ளையில் அவர்களின் 32 லட்சம் வெள்ளி சம்பந்தப்பட்ட வங்கி கணக்குகளையும் எஸ்.பி.ஆர்.எம். முடக்கியுள்ளது. வேலை இழந்த தொழிலாளர்களுக்கு மறுபயிற்சி அளித்து, வேலைக்கு சேர்த்துக்கொண்டதைப் போல போலியான ஆவணங்கள் மற்றும் கணக்குகளை காட்டி, அரசாங்கத்திடமிருந்து பணம் பெற்றது தொடர்பில் நிறுவன இயக்குநர்கள், நிர்வாகிகள் உட்பட 67 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக எஸ்.பி.ஆர்.எம். தெரிவித்துள்ளது.

தவிர அரசாங்கப் பணத்தை பயன்படுத்தி அவர்கள் வாங்கிய சொகுசு கார்கள் உட்பட அவர்களின் உடமைகள் பறிமுதல் செய்யப்படுவதற்கும் எஸ்.பி.ஆர்.எம். நடவடிக்கை எடுத்து வருவதாக எஸ்.பி.ஆர்.எம். புலனாய்வுப்பிரிவின் மூத்த இயக்குநர் டத்தோஸ்ரீ ஹிஷாமுடின் ஹஷிம் தெரிவித்துள்ளார்.

Related News

Penjana Kerjaya நிதிமுறைகேடு இதுவரையில் 67 பேர் கைது | Thisaigal News