Sep 27, 2026
Thisaigal NewsYouTube
பாதிக்கப்பட்டவர்களின் கண்ணீருக்குப் பரிகாரம்: இழப்பீடு கோருவதை கட்டாயமாக்கியது  சட்டத்துறை அலுவலகம்
தற்போதைய செய்திகள்

பாதிக்கப்பட்டவர்களின் கண்ணீருக்குப் பரிகாரம்: இழப்பீடு கோருவதை கட்டாயமாக்கியது சட்டத்துறை அலுவலகம்

Share:

இனி வரும் காலங்களில் போதையில் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்துதல் உள்ளிட்ட குற்றவியல் வழக்குகளில், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இழப்பீடு கோரி விண்ணப்பிப்பதை அனைத்து துணை பப்ளிக் பிராசிகியூட்டர்களும் கட்டாயமாக்க வேண்டும் என்று சட்ட்டததுறை தலைவர் டான் ஸ்ரீ முகமட் தசுகி மொக்தார், உத்தரவுப்பிறப்பித்துள்ளார்.

குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 426-ன் கீழ், குற்றவாளிக்கு வழங்கப்படும் சிறைத்தண்டனை அல்லது அபராதத்துடன் கூடுதலாக, பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கவும் நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது. இதுவரை இந்த நடைமுறை பரவலாகப் பயன்படுத்தப்படாத நிலையில், இனி இது தீவிரமாக அமல்படுத்தப்பட வேண்டும் என்று சட்டத்துறை தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

• பாதிக்கப்பட்ட குடும்பங்களின் நலனைப் பாதுகாத்தல், நீதிமன்ற விசாரணைக்குப் பிறகு பாதிக்கப்பட்டவர்கள் கைவிடப்படுவதைத் தடுத்தல், பொதுமக்களின் நலன் மற்றும் நீதியை நிலைநாட்டுதல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அண்மையில் கிள்ளான் பகுதியில் போதையில் வாகனமோட்டி சென்றவரால் மோதப்பட்டு உயிரிழந்த அமிருல் ஹபீஸ் என்ற இளைஞரின் மரணத்தைத் தொடர்ந்து, இத்தகைய குற்றவாளிகள் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. இதனைத் தொடர்ந்தே இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related News

சபாவில் நிலநடுக்கத்தைக் கண்காணிக்க 28 நில அதிர்வு நிலையங்கள் - மெட்மலேசியா அறிவிப்பு

சபாவில் நிலநடுக்கத்தைக் கண்காணிக்க 28 நில அதிர்வு நிலையங்கள் - மெட்மலேசியா அறிவிப்பு

நஜிப்புக்கு ஆதரவாக இதுவரை 9.25 மில்லியன் ரிங்கிட் திரட்டப்பட்டுள்ளது - ஸாஹிட் ஹாமிடி தகவல்

நஜிப்புக்கு ஆதரவாக இதுவரை 9.25 மில்லியன் ரிங்கிட் திரட்டப்பட்டுள்ளது - ஸாஹிட் ஹாமிடி தகவல்

கோலாலம்பூர் கேளிக்கை மையத்தில் அதிரடிச் சோதனை: ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான நடன நிகழ்ச்சிகளை நடத்திய 4 பேர் கைது

கோலாலம்பூர் கேளிக்கை மையத்தில் அதிரடிச் சோதனை: ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான நடன நிகழ்ச்சிகளை நடத்திய 4 பேர் கைது

நேபாள வெள்ளத்தில் மாயமான 55 மலேசியர்களின் கதி என்ன? - வெளியுறவு அமைச்சிடம் குடும்பத்தினர் முறையீடு

நேபாள வெள்ளத்தில் மாயமான 55 மலேசியர்களின் கதி என்ன? - வெளியுறவு அமைச்சிடம் குடும்பத்தினர் முறையீடு

கலும்பாங்–கோலா குபு பாரு சிக்னல் கோளாறு: கேடிஎம் சேவைகளில் தாமதம்

கலும்பாங்–கோலா குபு பாரு சிக்னல் கோளாறு: கேடிஎம் சேவைகளில் தாமதம்

யுஐடிஎம் ஹோல்டிங்ஸ்: முதலில் விசாரணை, பின்னர் நடவடிக்கை – அன்வார்

யுஐடிஎம் ஹோல்டிங்ஸ்: முதலில் விசாரணை, பின்னர் நடவடிக்கை – அன்வார்