மக்கள் நலன் சார்ந்தத் திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்தப்படுவதை உறுதிசெய்ய, அடுத்த பொதுத் தேர்தலில் ஒற்றுமை அரசாங்கக் கூட்டணி வெற்றியைத் தக்கவைக்க வேண்டும் என்று பிகேஆர் துணைத் தலைவர் நூருல் இசா அன்வார் கூறினார்.
அந்த வெற்றியின் அடிப்படையாக, சபா மாநிலத் தேர்தலில் பெறப்படும் வெற்றியில் இருந்து தொடங்க வேண்டும் என்றார் அவர்.
நமது முதல் வெற்றியை 2020இல் ஷெரட்டன் நகர்வின் வழி பறிக்கப்பட்டது. ஆமால், இந்த முறை வெற்றி கூட்டணி அரசாங்கத்தை அமைத்ததால் தொடர்கிறது என்றார்.
மேலும், அவதூறுகளில் இருந்து கட்சி உறுப்பினர்கள் விலகியே இருக்க வேண்டும். அது வெளியில் இருந்து வரும் அவதூறு மட்டும் அல்ல, மாறாக கட்சியினுள் இருந்து வரும் அவதூறு குற்றச்சாட்டுகளுக்கும் பொருந்தும். இல்லையேல், கட்சியின் வெள்ளியை மட்டும் இல்லாமல், இது நாள் வரையில் கட்டுக் காத்து வந்த போராட்டங்களையும் ஒழித்து விடும் என உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தினார்.








