Dec 3, 2025
Thisaigal NewsYouTube
தாய்லாந்து - கம்போடியா எல்லை பிரச்சினைகளைத் தீர்க்க இரு தரப்புப் பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட வேண்டும் - அன்வார் வலியுறுத்து
தற்போதைய செய்திகள்

தாய்லாந்து - கம்போடியா எல்லை பிரச்சினைகளைத் தீர்க்க இரு தரப்புப் பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட வேண்டும் - அன்வார் வலியுறுத்து

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.20-

தாய்லாந்து, கம்போடியா இடையிலான எல்லை பிரச்சினைகள், இரு தரப்புப் பேச்சு வார்த்தைகளின் மூலம் தீர்க்கப்பட வேண்டுமென மலேசியப் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.

நேற்று கம்போடிய பிரதமர் ஹுன் மானேட்டுடன் தொலைப்பேசி வழியாக உரையாடிய அன்வார், தாய்லாந்து – கம்போடிய எல்லை விவகாரத்தின் தற்போதைய நிலவரம் குறித்துக் கேட்டறிந்துள்ளார்.

இது குறித்து தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் தகவல் தெரிவித்துள்ள அவர், ஆசியான் கூட்டணி நாடுகளிடையே எழும் எந்த ஒரு பிரச்சினையும் சுமூகமான பேச்சு வார்த்தைகள் மற்றும் புரிந்துணர்வுகள் அடிப்படையில் தீர்க்கப்படும் என மலேசியா நம்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஜூலை மாதம் தாய்லாந்து – கம்போடியா இடையே நடந்த எல்லை மோதலில், 33 உயிர்கள் பலியானதையடுத்து, மலேசியா இந்த விவகாரத்தில் தலையிட்டு சண்டை நிறுத்தம் செய்யக் காரணமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Related News