Feb 5, 2026
Thisaigal NewsYouTube
பயணிகள் இனி My50-இல் சேமிப்பைத் தெரிந்து கொள்ளலாம்: பயன்பாட்டை அதிகரிக்க புதிய வசதி
தற்போதைய செய்திகள்

பயணிகள் இனி My50-இல் சேமிப்பைத் தெரிந்து கொள்ளலாம்: பயன்பாட்டை அதிகரிக்க புதிய வசதி

Share:

கோலாலம்பூர், பிப்ரவரி.05-

My50 பயண அட்டையைப் பயன்படுத்தும் பொதுமக்கள், இனி தாங்கள் எவ்வளவு தொகையைச் சேமிக்கிறார்கள் என்பதைக் கண்காணிக்கும் மற்றும் பயன்பாட்டை மேம்படுத்தும் புதிய வசதியை Touch ‘n Go eWallet செயலி மூலம் பெறலாம் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.

இந்த புதிய 'சேமிப்பு கண்காணிப்பு' வசதியை அறிமுகப்படுத்திய அமைச்சர், இத்தகை வசதி மூலம் பயணிகள் தங்களின் பயணச் செலவு மற்றும் சேமிப்பை எளிதாகப் புரிந்து கொள்ள முடியும் என்றார்.

ஒவ்வொரு முறை இரயில் அல்லது பேருந்து சேவையைப் பயன்படுத்தும் போதும், அந்தப் பயண விவரம் கணினியில் பதிவு செய்யப்படும். இதன் மூலம் பயனர் 50 ரிங்கிட் மதிப்பிலான பயணத்தை எட்டிவிட்டாரா இல்லையா என்பதைச் செயலி காட்டும்.

பயனரின் பயன்பாடு இன்னும் 50 ரிங்கிட்டை எட்டவில்லை என்றால், அந்த இலக்கை அடைய இன்னும் எத்தனை பயணங்கள் மேற்கொள்ள வேண்டும் என்ற விவரத்தையும் இந்தச் செயலி தெரிவிக்கும்.

தவிர 50 ரிங்கிட் மதிப்பைக் கடந்த பிறகு, அந்த 30 நாட்களில் பயனர் மேற்கொண்ட மொத்தப் பயணங்கள் மற்றும் அவர் சேமித்த உண்மையான பணத்தின் மதிப்பையும் இதில் பார்க்க முடியும்.

இந்த முன்முயற்சி பொதுமக்களிடையே பொதுப் போக்குவரத்துப் பயன்பாட்டை ஊக்கப்படுத்துவதையும், My50 அட்டையின் உண்மையான மதிப்பை அவர்கள் உணரச் செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அம்பாங் பார்க் எல்ஆர்டி நிலையத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் அந்தோணி லோக் இதனைத் தெரிவித்தார்.

Related News