Jul 31, 2026
Thisaigal NewsYouTube
30 அந்நிய நாட்டுப்பெண்கள் கைது
தற்போதைய செய்திகள்

30 அந்நிய நாட்டுப்பெண்கள் கைது

Share:

விபசார நடவடிக்கைக்கு பிரதான மையமாக விளங்கி வந்த மூன்று வளாகங்களில் கோலாலம்பூர் போலீசார் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையில் அந்நிய நாட்டைச் சேர்ந்த 30 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

கோலாலம்பூர் மாநகரில் நில அடையாளத்தை தாங்கிய பகுதிகளான ஜாலான் பசார் ஹரு, ஜாலான் புது, ஜாலான் இம்பி ஆகிய பகுதிகளில் கடந்த வியாழக்கிழமை இரவு 7.45 மணி முதல் இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பபட்டதாக டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைவர் நூர் டெல்ஹான் யஹாயா தெரிவித்தார்.

விபச்சாரத்தில் ஈடுபட்டதாக நம்பப்படும் 23 வயது முதல் 59 வயது வரைக்குமான இந்த 30 பெண்கள் கைது செய்யப்பட்டது மூலம் விபச்சாரத்திற்கு பயன்படுத்தப்படும் சில பொருட்களை பறிமுதல் செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

Related News