கோலாலம்பூர், டிசம்பர்.18-
பள்ளி விடுமுறை மற்றும் ஆண்டு இறுதி விடுமுறை தொடங்கவிருக்கும் வேளையில் தாய்லாந்து, Hat Yai நகருக்குப் பயணம் மேற்கொள்வதை ஒத்தி வைக்குமாறு மலேசியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பு பெய்த அடை மழையைத் தொடர்ந்து Hat Yai நகர், தற்போது மோசமான சூழ்நிலையில் இருப்பதாக தாய்லாந்து, Songkhlah- வில் உள்ள மலேசியத் துணைத் தூதர அஹ்மாட் ஃபாமி சர்காவி தெரிவித்தார்.
இந்த வெள்ளத்தினால் 1.3 பில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள சேதம் ஏற்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்திற்குப் பிந்தைய பாதிப்புகள் இன்னும் முழுமையாகக் களையப்படவில்லை. சாலைகள் மற்றும் வணிக வளாகங்களிலிருந்து சேறும், சகதிகளும், கழிவுகளும் அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
வணிக வளாகங்கள் தொடர்ந்து முடப்பட்டுள்ளன. Han Yai சுற்றுலா நடவடிக்கைகள் இன்னும் தொடங்கப்படவில்லை என்பதையும் அவர் விளக்கினார்.








