Jun 29, 2026
Thisaigal NewsYouTube
அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: புகார்கள் குறித்து காவல்துறை தீவிர விசாரணை
தற்போதைய செய்திகள்

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: புகார்கள் குறித்து காவல்துறை தீவிர விசாரணை

Share:

பாச்சோக், மார்ச்.01-

மலேசிய அரசாங்கத்தைக் கவிழ்க்கவும் நாட்டின் நிலைத்தன்மையைக் குலைக்கவும் முயற்சி நடப்பதாகக் கூறப்படும் புகார்கள் குறித்து, மலேசியக் காவற்படை விசாரணையைத் தொடங்கியுள்ளதாக உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் உறுதிப்படுத்தியுள்ளார்.

அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, இத்தகையப் புகார்களுக்கு முன்னுரிமை அளித்து விசாரணை நடத்த ஆணையிடப்பட்டுள்ளதாகவும், தற்போது விசாரணை தொடக்கக் கட்டத்தில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். செல்வாக்குமிக்க ஒருவரும் அனைத்துலக ஊடக நிறுவனமும் இந்தச் சதியில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில், குற்றவியல் சட்டத்தின் பிரிவு 124B-இன் கீழ் புக்கிட் அமான் சிறப்புப் புலனாய்வுப் பிரிவு இதனை விசாரித்து வருகிறது. வெளிநாட்டு முகவர்களின் அடிப்படையிலும் ஆவணங்களின் அடிப்படையிலும் இந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், குற்றம் நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்டவர்களுக்கு 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

Related News

விபத்தை ஏற்படுத்திவிட்டுத் தப்பியோடிய கார் ஓட்டுநருக்குப் போலீஸ் வலைவீச்சு

விபத்தை ஏற்படுத்திவிட்டுத் தப்பியோடிய கார் ஓட்டுநருக்குப் போலீஸ் வலைவீச்சு

ஜோகூர் தேர்தல்: நெடுஞ்சாலைகளில் கட்டணமில்லா பயணத்தை வழங்க ஜசெக துணைத் தலைவர் பரிந்துரை

ஜோகூர் தேர்தல்: நெடுஞ்சாலைகளில் கட்டணமில்லா பயணத்தை வழங்க ஜசெக துணைத் தலைவர் பரிந்துரை

தீபாவளி பலகாரங்களை வெள்ளம் அடித்துச் சென்ற வடு..... ஸ்கூடாய் மக்களின் கண்ணீரைத் துடைப்பாரா வழக்கறிஞர் கார்த்தியாயினி?

தீபாவளி பலகாரங்களை வெள்ளம் அடித்துச் சென்ற வடு..... ஸ்கூடாய் மக்களின் கண்ணீரைத் துடைப்பாரா வழக்கறிஞர் கார்த்தியாயினி?

டீசல் மானிய விண்ணப்பங்களை எளிதாக்க ஜூலையில் வார இறுதி நாட்களிலும் ஜேபிஜே, யுடிசி அலுவலகங்கள் இயங்கும்

டீசல் மானிய விண்ணப்பங்களை எளிதாக்க ஜூலையில் வார இறுதி நாட்களிலும் ஜேபிஜே, யுடிசி அலுவலகங்கள் இயங்கும்

மாநிலத் தேர்தலுக்காகப் பாஸ் கட்சியுடன் அம்னோ தலைவர்கள் ரகசியப் பேச்சுவார்த்தை: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு

மாநிலத் தேர்தலுக்காகப் பாஸ் கட்சியுடன் அம்னோ தலைவர்கள் ரகசியப் பேச்சுவார்த்தை: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரின் இறுதி மேல்முறையீட்டுத் தீர்ப்பு நாளை வெளியீடு

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரின் இறுதி மேல்முறையீட்டுத் தீர்ப்பு நாளை வெளியீடு