Dec 3, 2025
Thisaigal NewsYouTube
போதைப்பொருள் பதனிடும் கும்பல் முறியடிப்பு
தற்போதைய செய்திகள்

போதைப்பொருள் பதனிடும் கும்பல் முறியடிப்பு

Share:

ஆறு நபர்களை கைது செய்து 6 லட்சத்து 72 ஆயிரத்து 649 வெள்ளி பெறுமானமுள்ள போதைப்பொருளை போலீசார் கைப்பற்றியது மூலம் இரண்டு சகோதர்களால் நடத்தப்பட்டு வந்த போதைப்பொருள் பதனிடும் கும்பல் முறியடிக்கப்பட்டுள்ளது.

கடந்த புதன்கிழமை, ஈப்போ அருகில் ஜெலபாங்கில் கூடாரம் ஒன்றில் போலீசார் மேற்கொண்ட திடீர் சோதனையின் போது உள்ளூரை சேர்ந்த 32 க்கும் 57 க்கும் இடைப்பட்ட வயதுடைய ஆறு நபர்கள் கைது செய்யப்பட்டதாக பேரா மாநில போலீஸ் தலைவர் முஹமாட் யுஸ்ரி ஹாஸான் தெரிவித்தார்.
பாதுகாவலர், மீன் குளம் பராமரிப்பாளர், புற்கள் வெட்டும் தொழிலாளி என பலதரப்பட்ட வேலைகளை செய்து வந்ததாக கூறும் இந்த ஆறு நபர்களும் போதைப்பொருள் பதனிடும் கூடத்தில் வேலை செய்து வந்தது தெரியவந்துள்ளது என்று முகமட் யுஸ்ரி ஹஸான் குறிப்பிட்டார்.


பேரா மாநிலம் முழுவதும் போதைப்பொருள் சந்தையில் அதனை விநியோகிப்பதில் மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல் கும்பலாக பார்க்கப்பட்ட கைது செய்தது மூலம் போதைப்பொருளை பதப்படுத்துவதற்கு பயன்படுத்திய சாதனங்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டதாக யுஸ்ரி ஹஸான் தெரிவித்தார்.

Related News