கோலாலம்பூர், பிப்ரவரி.09-
கோலாலம்பூர் மாநகர் மன்றமான டிபிகேஎல்லின் நகர்ப்புறத் திட்டமிடலில் வெளிப்படைத்தன்மையை வலுப்படுத்த, தனது One Stop Centre என்ற OSC இணையதளத்தை பொதுமக்களின் பார்வைக்குத் திறந்து விட்டுள்ளது. இதன் மூலம் மக்கள் தங்கள் பகுதியில் நடைபெறும் மேம்பாட்டுத் திட்டங்கள் மற்றும் அனுமதிகள் குறித்த தகவல்களை நேரடியாக அறிந்து கொள்ள முடியும் என்று கூட்டரசு பிரதேசத்திற்கான பிரதமர் துறை அமைச்சர் ஹன்னா இயோ தெரிவித்தார்.

தனிப்பட்ட தகவல்கள் மற்றும் ரகசிய ஆவணங்களைப் பாதுகாத்து, பொதுமக்களுக்குத் தேவையான தகவல்கள் மட்டுமே இதில் பகிரப்படும் என்று அமைச்சர் ஹன்னா இயோ உறுதி அளித்துள்ளார். இந்த நீண்டகாலக் கோரிக்கையை நிறைவேற்றிய டத்தோ பண்டார் Datuk Seri Fadlun Mak Ujud - க்கு அமைச்சர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
கோலாலம்பூர் நகரின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதில் அதன் குடிமக்களுக்கும் பங்கு உண்டு என்பதை இந்த நடவடிக்கை உறுதிச் செய்கிறது. வளர்ச்சித் திட்டங்கள் ரகசியமாகவோ அல்லது ஒரு குறிப்பிட்ட தரப்பினருக்காகவோ மட்டும் இருக்கக்கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது. இந்தச் சீர்திருத்தம் மூலம் ஊழல் முறைகேடுகள் தவிர்க்கப்பட்டு, மக்கள் நம்பிக்கையுடன் கூடிய ஒரு சீரான நகர மேம்பாடு அமையும் என்று அமைச்சர் ஹன்னா இயோ தெரிவித்தார்.








