மலாக்கா, அக்டோபர்.06-
பாலஸ்தீனர்களுக்கு எதிரான சியோனிச ஆட்சியின் அட்டூழியங்களைக் கண்டித்தும், இஸ்ரேலியப் படைகளால் மலேசியத் தன்னார்வலர்கள் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் மலாக்காவில் நேற்று சுமார் 5000-க்கும் மேற்பட்டோர் அமைதிப் பேரணியில் பங்கேற்றனர்.
Stadthuys கட்டிடத்தின் முன் துவங்கிய இப்பேரணி, பண்டா ஹிலிரில் உள்ள சுதந்திர பிரகடன நினைவுச் சதுக்கத்தில் நிறைவடைந்தது.
இப்பேரணியில் ஜோகூர், நெகிரி செம்பிலான், கோலாலம்பூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களோடு, சுற்றுலாப் பயணிகளும் கலந்து கொண்டனர்.
அதே வேளையில், சிந்தா காஸா மலேசியா போன்ற அரசு சாரா இயக்கங்களும், மலாக்கா மாநில அரசாங்கத்தைச் சேர்ந்த சில பிரதிநிதிகளும் இப்பேரணியில் கலந்து கொண்டனர்.








