May 27, 2026
Thisaigal NewsYouTube
சிறார்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தும் ஆபாச வீடியோ படங்கள் குவிப்பு: போலீசாரின் அதிரடி நடவடிக்கையில் 13 பேர் கைது
தற்போதைய செய்திகள்

சிறார்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தும் ஆபாச வீடியோ படங்கள் குவிப்பு: போலீசாரின் அதிரடி நடவடிக்கையில் 13 பேர் கைது

Share:

கோலாலம்பூர், டிச. 24-

சிறார்களை பாலியல் ரீதியாக துன்புறுத்துவது, சிறார்கள் மற்றும் பெரியவர்கள் சம்பந்தப்பட்ட ஆபாச வீடியோப்படங்களை குவித்து வைத்திருந்த 13 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருடின் ஹுசேன் தெரிவித்துள்ளார்.

மலேசிய தொடர்பு மற்றம் பல்லூடக ஆணையமான MCMC ஒத்துழைப்புடன் தீபகற்ப மலேசியாவில் 6 மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைந்த சோதனை நடவடிக்கையில் 20 க்கும் 74 க்கும் இடைப்பட்ட வயதுடைய 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஐஜிபி தெரிவித்தார்.

இந்த 13 பேரிடமிருந்து மொத்தம் 40 ஆயிரம் அபாச வீடியோ பட உள்ளடக்கங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தனிப்பட்ட பதிவாகவும்,தங்களின் கணினிகளில் பதிவேற்றமும் செய்யப்பட்ட இந்த ஆபாச வீடியோ படங்கள் பெரும்பாலாவை சியார்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தும்படும் ஆபாசப் படங்களாகும். இந்த சோதனை நடவடிக்கை சிலாங்கூர், கோலாலம்பூர், பினாங்கு, பேராக், ஜோகூர் மற்றும் திரெங்கானுவில் ஏகக்காலத்தில் மேற்கொள்ளப்பட்டதாக டான்ஸ்ரீ ரஸாருடின் விளக்கினார்.

இந்த ஆபாசப்படங்களை பதிவேற்றம் செய்யப்பட்டு இருந்த 7 கணினிகள், ஒரு மடிக்கணினி, 11 கைப்பேசிகள். 16 மோடம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

பிடிபட்டுள்ள 13 பேருக்கு எதிரா விசாரணை அறிக்கைகள் திறக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு எதிராக 2017 ஆம் ஆண்டு சிறார் பாலியல் சட்டம் மற்றும் 292 குற்றவியல் சட்டம் ஆகியவை பிரயோகிக்கப்படும் என்பதையும் ஐஜிபி விளக்கினார்.

Related News

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

7 ஆயிரம்  பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

7 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம்  ஒப்படைப்பு

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம் ஒப்படைப்பு