Dec 4, 2025
Thisaigal NewsYouTube
குறைகளை ஆக்கப்பூர்மான முறையில் சுட்டிக்காட்டுவீர்
தற்போதைய செய்திகள்

குறைகளை ஆக்கப்பூர்மான முறையில் சுட்டிக்காட்டுவீர்

Share:

தங்களிடம் காணப்படக்கூடிய குறைககளை தகவல் சாதனங்கள் ஆக்கப்பூர்வமாக சுட்டிக்காட்டுவது மூலம் அந்த குறைகளை திருத்திக்கொண்டு, இன்னும் ஆக்கப்பூர்வமாக செயல்படுவதற்கு அரசாஙகப் பொறுப்பில் உள்ளவர்களுக்கு உதவும் என்று மனித வள அமைச்சர் வி. சிவகுமார் தெரிவித்தார்.

ஆக்கப்பூர்வமான குறைககளை சுட்டிக்காட்டுவது மூலம் அதன் வாயிலாக சமூகமும் நாடும் பயன்பெறுவற்கு தலைவர்களுக்கு ஒரு வழிகாட்டலாக விளங்க முடியும் என்று அமைச்சர் சிவகுமார் குறிப்பிட்டார்.

வருகின்ற தீபாவளி திருநாளை முன்னிட்டு தகவல், இலக்கவியல் துணை அமைச்சர் தியோ நீ சிங் ஏற்பாட்டில் இன்று கோலாலம்பூரில் முன்னணி உணவகம் ஒன்றில் தமிழ் ஊடகவியலாளர்களுக்கு டிஏபி தலைவர்கள் வழங்கிய மதிய விருந்து உபசரிப்பில் கலந்து கொண்ட டிஏபியின் முக்கியத் தலைவரான சிவகுமார் மேற்கண்டவாறு கூறினார்.

அதேவேளையில் மக்களுக்கான அரசாங்கத் திட்டங்களை இலக்குக்குரிய மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் தகவல் சாதனங்கள் ஆற்ற வேண்டிய முக்கிய பங்களிப்பையும் அமைச்சர் தமது உரையில் விளக்கினார்.

இந்நிகழ்வில் உரையாற்றிய டிஏபி முக்கியத் தலைவரும், பேரா மாநில ஆட்சிக்குழு உறுப்பினருமான ஏ. சிவநேசன், நாட்டில் அதிகமான தமிழ்ப்பள்ளிகளை கொண்டுள்ள மாநிலம் என்ற பெருமையை கொண்ட பேரா மாநிலத்தில் 133 தமிழ்ப்பள்ளிகள் இருந்தும் கடந்த 3 மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்ப்பள்ளிகளுக்கு ஒரு சல்லிகாசுகூட ஒதுக்கப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டினார்.

இந்த முறை பேரா மாநிலத்திற்கு தாங்கள் தலைமையேற்றப்பின்னர் வரும் பட்ஜெட்டில் பேரா மாநிலத்தில் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு ஒரு பெரும் தொகை ஒதுக்கப்படவிருப்பதாகவும் தமது உரையில் குறிப்பிட்டார்.

கூலாய் நாடாளுமன்ற உறுப்பினருமான தியோ நீ சிங் கின் வரவேற்புரையுடன் தொடங்கிய இந்த நிகழ்வில் டிஏபி உதவித் தலைவர் எம். குலசேகரன், ஜெலுத்தோங் எம்.பி. ஆர் எஸ் என் ராயர், கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் எஸ். பிராகஷ், துணை கல்வி அமைச்சர் லிம் ஹுய் ஹிங், பினாங்கு ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ சுந்தரராஜு சோமு, கிள்ளான் எம்.பி. வீ. கணபதிராவ், புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் துளசி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சாமிநாதன், முன்னாள் பத்து காவான் எம்.பி. கஸ்தூரி பட்டு உட்பட டிஏபியின் முக்கிய தலைவர்கள் இந்த விருந்து உபசரிப்பில் கலந்து கொண்டனர்.

Related News