Oct 9, 2026
Thisaigal NewsYouTube

இந்திய சமூகத்திற்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான உறவைப் பலப்படுத்தும் “நண்பா” திட்டம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
இந்திய சமூகத்திற்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான உறவைப் பலப்படுத்தும் “நண்பா” திட்டம்

கோலாலம்பூர், ஜூன்.22-

தகவல் அமைச்சின் கீழ் செயல்படும் சமூகத் தொடர்புத் துறையான ஜே-கோம் ஏற்பாடு செய்யும் "நண்பா" திட்டம், இந்திய சமூகத்திற்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான உறவைப் பலப்படுத்தும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டுள்ளது. நாடி அஸ்பிராசி நேசனல் அனாக் மூடா இதன் சுருக்கமே "நண்பா" என்ற தமிழ்ச் சொல் இயம்புகிறது. அரசாங்கக் கொள்கைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது இதன் முக்கிய நோக்கமாகும்.

இந்த நிகழ்ச்சி, எதிர்வரும் ஜூன் 28 ஆம் நாள் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை, லெம்பா பந்தாய், IWK இகோ பார்க், மெர்பாவ் மண்டபத்தில் நடைபெறும். தொடர்புத் துறை அமைச்சர் டத்தோ ஃபாமி ஃபாட்ஸீல் இந்த நிகழ்சியைத் தொடக்கி வைக்கிறார். புதையல் வேட்டை, விளக்கக் கூட்டங்கள், அரசு - தனியார் நிறுவனங்களின் சேவை முகப்புகள், வண்ணம் தீட்டும் போட்டி போன்ற பல்வேறு ஈர்க்கக்கூடிய அங்கங்கள் இந்த நிகழ்ச்சியில் இடம்பெறும். இதன் மூலம் இந்திய இளைஞர்கள் அரசாங்கத்தின் திட்டங்கள், கொள்கைகள், வாய்ப்புகள் பற்றிய தகவல்களை அறிந்து கொள்வதோடு, இணைய அச்சுறுத்தல்கள் குறித்த விழிப்புணர்வையும் பெறுவார்கள்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →