ஷா ஆலாம், ஜூலை.13-
நீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் வீட்டுக் காவலுக்கான அரசரின் துணை உத்தரவு உடனடியாகச் செயல்படுத்தப்பட வேண்டும் என்று அம்னோ இளைஞர் பிரிவு வலியுறுத்தியுள்ளது. இந்த உத்தரவை செயல்படுத்த மறுப்பது, நாட்டின் அரசியலமைப்பின் தூணாக விளங்கும் மன்னருக்கு எதிரான துரோகம். மேலும் அவமதிப்பதற்குச் சமம் என்று அம்னோ இளைஞர் பிரிவு கருதுகின்றது.
முன்பு மறுக்கப்பட்ட பின்னரும், இந்தத் துணை உத்தரவின் இருப்பைச் சட்டத்துறை ஒப்புக் கொண்டது அதிர்ச்சியளிப்பதாக அம்னோ இளைஞரணி தெரிவித்துள்ளது. டத்தோ ஸ்ரீ நஜிப் ரசாக், தனது மீதமுள்ள சிறைவாசத்தை வீட்டுக் காவலில் கழிக்க அனுமதிக்கும் 2024 ஜனவரி 29ஆம் தேதியிட்ட கூடுதல் உத்தரவை அரசு செயல்படுத்த வேண்டும் என்று விரும்புகிறார்.
இதற்கிடையில், கெப்போங் டிஏபி நாடாளுமன்ற உறுப்பினர் லிம் லிப் எங், நஜிப்பை வீட்டுக் காவலில் வைக்கும் யோசனையைக் கேள்விக்குள்ளாக்கியதற்கு அம்னோ இளைஞரணி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.








