Oct 10, 2026
Thisaigal NewsYouTube

பல்கலைக்கழக மாணவன் கைது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பல்கலைக்கழக மாணவன் கைது

கோலாலம்பூர், ஜூன்.19-

சிறார்களைப் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கும் படங்கள் மற்றும் ஆபாசப் படங்கள் என சுமார் 5 ஆயிரம் படங்களைத் தன்வசம் வைத்திருந்ததாகக் கூறப்படும் பல்கலைக்கழக மாணவன் ஒருவனைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

அந்த ஆபாசப் படங்கள் மற்றும் சிறார் பாலியல் துன்புறுத்தல் படங்களில் பெரும் பகுதி, 20 வயது மதிக்கத்தக்க அந்த மாணவனே சொந்தமாகத் தயாரித்ததாக கூறப்படுகிறது.

கூகுள் ஒத்துழைப்புடன் கடந்த ஏப்ரல் 29 ஆம் தேதி மாலை 4 மணியளவில் ஓப் பெடொ என்ற சிறப்புச் சோதனை நடவடிக்கையின் மூலம் அந்த பல்கலைக்கழக மாணவன் கைது செய்யப்பட்டதாக புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் குற்றப்புலனாய்வுத் துறையின் தலைமை உதவி இயக்குநர் ஏசிபி சித்தி கம்சியா ஹசான் தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →