20 கிலோகிராம் எடையுள்ள மலைப்பாம்பு ஒன்று பெட்டாலிங் ஜெயா செக்க்ஷன் 11 வீடமைப்பு பகுதியின் கால்வாயில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அந்த வீடமைப்பு பகுதியில் பணியாற்றிக் கொண்டிருந்த கட்டடத் தொழிலாளர் ஒருவர் கண்டவுடன், அதனை அவ்வீட்டு முதலாளியிடம் தகவல் தெரிவித்திருந்த பின்னர், வீட்டு முதலாளி பொது பாதுகாப்பு அதிகாரிகளை தொடர்ப்பு கொண்டுள்ளார்.
கால்வாயிலிருந்து அந்த 20 கிலோகிராம் எடை கொண்ட மலைப்பாம்பை வெளியில் எடுக்க பொது பாதுகாப்பு படையினருக்கு 15 நிமிடம் எடுத்து கொண்டதாக அதன் பேச்சாளர் தெரிவித்தார்.







