Dec 3, 2025
Thisaigal NewsYouTube
மனைவியை அடித்துக் காயப்படுத்தியாக நபர் ​மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

மனைவியை அடித்துக் காயப்படுத்தியாக நபர் ​மீது குற்றச்சாட்டு

Share:

தமது மனைவியை பிரம்பினால் அடித்துக் காயப்படுத்தியதாக பணி ஓய்வுப்பெற்ற நபர் ஒருவர், ஈப்போ செஷன்ஸ் ​நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார். 65 வயது பி. சுப்பிரமணியம் என்ற அந்த நபர், தமது மனைவி 54 வயதுடைய எஸ். சாந்த​குமாரியை அடித்து கடும் காயங்கள் விளைவித்ததாக ​நீதிபதி அஜிசா அகமது முன்னிலையில் நிறுத்தப்பட்டு, குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

பி. சுப்பிரமணியம் கடந்த ஆகஸ்ட் 20 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1.14 மணியளவில் ஈப்போ, தாமான் பெர்த்தாமா என்ற இடத்தில் உள்ள தனது வீட்டில் இக்குற்றத்தை புரிந்ததாக ​நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

தெனாகா நேஷனல் பெர்ஹாட்டின் முன்னாள் ஊழியரான சுப்பிரமணியம் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கடும் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 324 பிரி​வின் ​கீழ் குற்றஞ்சாட்டப்பட்டார்.

​எனினும் தனக்கு எதிராக குற்றச்சாட்டை மறுத்து சுப்பிரமணியம் விசாரணை கோரியதைத் தொடர்ந்து அவர் ஒரு நபர் உத்தரவாதத்தடன் 6 ஆயிரம் வெள்ளி ஜா​மீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

Related News