குவாந்தான், டிசம்பர்.07-
இன்று அதிகாலை 5.40 மணியளவில் கிழக்குக் கடற்கரை நெடுஞ்சாலையின் 182.9வது கிலோமீட்டரில், ஒரு பேருந்தும் இரண்டு லாரிகளும் சம்பந்தப்பட்ட கோர விபத்தில் ஒருவர் படுகாயமடைந்தார். பயணிகள் இல்லாத ஒரு சுற்றுலாப் பேருந்து முன்னால் சென்ற ஒரு லாரியின் பின்புறம் மோதியதாலேயே இந்த விபத்து ஏற்பட்டதாக மாரான் மாவட்ட காவற்படைத் தலைவர் சுப்ரிண்டெண்டன் வோங் கிம் வாய் தெரிவித்தார்.
இந்த மோதலின் விளைவாக, பேருந்தை மோதிய 61 வயதுடைய லாரி ஓட்டுநர் வாகனத்திற்குள் சிக்கிக் கொண்டார். அவரை மீட்கத் தீயணைப்பு வீரர்கள் சுமார் 20 நிமிடங்கள் போராடினர். கழுத்துப் பகுதியிலும் வயிற்றிலும் காயமடைந்த அந்த லாரி ஓட்டுநர் உடனடியாகத் தெமெர்லோவில் உள்ள சுல்தான் அஹ்மாட் ஷா மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டார்.








