பிரபல சமயப் போதகர் ஒருவர் பாலியல் தொல்லைகள் கொடுத்து வந்ததாக கூறப்படும் புகார்கள் தொடர்பில் இதுவரையில் 13 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் குற்றப்புலனாய்வுத்துறை இயக்குநர் டத்தோ செரி முஹமாட்ஷுஹைலி முஹமாட் சயின் தெரிவித்துள்ளார்.
அந்த சமயப் போதகருக்கு எதிராக இதுவரை இரண்டு போலீஸ் புகார்கள் செய்யப்பட்டுள்ளன. தன்னை மொன்டி டேட்டு என்று மட்டுமே அடையாளம் கூறிக்கொண்ட மாது ஒருவர், அந்த சமயப் போதகரால் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளானதாக புகார் கொடுத்துள்ளார். இப்புகார் குற்றவியல் சட்டம் 376 ஆவது பிரிவின் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருவதாக முஹமாட் ஷுஹைலி குறிப்பிட்டார்.







