கோலாலம்பூர், செப்டம்பர்.30-
சலுகை விலையில் புடி 95 பெட்ரோல் திட்டம், நாடு முழுவதும் இன்று அமலுக்கு வந்துள்ள வேளையில் எண்ணெய்யை நிரப்பும் போது, பம்ப் இயந்திரத்தில் ரோன் 95 பெட்ரோல் விலை லிட்டருக்கு ஒரு ரிங்கிட் 99 காசு என்று காட்சிப்படுத்தாமல் இருக்குமானால் அது குறித்து பீதி அடைய வேண்டியதில்லை என்று வாடிக்கையாளர்களுக்கு எண்ணெய் நிலையங்கள் அறிவுறுத்தியுள்ளன.
இன்று செப்டம்பர் 30 ஆம் தேதி முழுமையாக தொடங்கியுள்ள புடி 95 பெட்ரோல் சலுகைத் திட்டத்தில் அனைத்து மலேசியர்களும் ரோன் 95 பெட்ரோலை லிட்டருக்கு ஒரு ரிங்கிட் 99 காசுக்கு பெறுவதற்குத் தகுதி பெற்றுள்ளனர்.
அந்நிய நாட்டவர்கள் மட்டுமே சலுகை விலையின்றி ரோன் 95 பெட்றோலைப் பெற முடியும் என்று எண்ணெய் நிலையங்கள் கேட்டுக் கொண்டுள்ளன.








