Dec 3, 2025
Thisaigal NewsYouTube
துன் மகாதீரின் சொத்துகள் குறித்த விசாரணைகள் தொடர்கின்றன - எஸ்பிஆர்எம் அறிவிப்பு!
தற்போதைய செய்திகள்

துன் மகாதீரின் சொத்துகள் குறித்த விசாரணைகள் தொடர்கின்றன - எஸ்பிஆர்எம் அறிவிப்பு!

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.09-

முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமதுவின் வெளிநாட்டு சொத்துக்கள் குறித்த விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் தலைமை ஆணையர் டான் ஶ்ரீ அஸாம் பாக்கி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று செவ்வாய்க்கிழமை புத்ராஜெயாவில் உள்ள எஸ்பிஆர்எம் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அஸாம் பாக்கி, துன் மகாதீரின் சொத்துக்கள் தொடர்பான தகவல்களைக், குறிப்பாக யுனைடெட் கிங்டமைச் சேர்ந்த அதிகாரிகளிடமிருந்து தாங்கள் சேகரித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அதே வேளையில், எஸ்பிஆர்எம்மிற்குக் கிடைக்கக்கூடிய தகவல்களை அடிப்படையாகக் கொண்டு, நடைபெற்று வரும் விசாரணை நிலவரம் குறித்து பொதுமக்களுக்கு தெரியப்படுத்துவோம் என்றும் அஸாம் பாக்கி தெரிவித்துள்ளார்.

Related News