Oct 10, 2026
Thisaigal NewsYouTube

குடியிருப்பு வீடுகளுக்கு எஸ்எஸ்டி இல்லை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
குடியிருப்பு வீடுகளுக்கு எஸ்எஸ்டி இல்லை

கோலாலம்பூர், ஜூன்.16-

வீட்டுவசதி மேம்பாட்டுச் சட்டத்தின் கீழ் விற்கப்படும் குடியிருப்பு வீடுகள் தொடர்புடைய சொத்துக்கள், விற்பனை மற்றும் சேவை வரியான எஸ்எஸ்டியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகின்றன என்று வீடமைப்பு, ஊராட்சித்துறை அமைச்சர் ங்கா கோர் மிங் தெரிவித்துள்ளார்.

நில உரிமை அல்லது சொத்தின் நோக்கத்திற்கான பயன்பாட்டின் அடிப்படையில் எஸ்எஸ்டி வரி விலக்கு தீர்மானிக்கப்படுகிறது என்று அவர் கூறினார்.

திருத்தப்பட்ட எஸ்எஸ்டி கட்டமைப்பில் தொழில்துறை பங்குதாரர்கள் எழுப்பிய கவலைகளுக்கு மத்தியில் இரண்டாவது நிதி அமைச்சர் டத்தோஸ்ரீ அமீர் ஹம்சா அஸிஸானுடன் தாம் நடத்திய ஆலோசனையின் பேரில் இந்த விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதாக ங்கா தெரிவித்தார்.

நிதி அமைச்சின்படி, சிமென்ட், திரள்கள் மற்றும் மணல் போன்ற அத்தியாவசியக் கட்டுமானப் பொருட்கள் 0 விழுக்காடு விற்பனை வரிக்கு உட்பட்டவையாகும் என்று அமைச்சர் தெளிவுபடுத்தினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →