தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்திற்கு 19 ஆயிரம் வெள்ளி மானியத்தை மனித வள அமைச்சர் வி. சிவகுமார் வழங்கியுள்ளார். இந்த மானியத்தைத் தேசியத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் சார்பாக சிலாங்கூர் மாநில செயலாளர் வை.தாமாசோகரன், பேராக் மாநில தலைவர் இஞ்சோ ரசாக் மற்றும் மாநில செயலாளர் மு. குணாசன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
இன்று மாலை ஈப்போ இம்பியானா ஹோட்டலில் நடைபெற்ற இந்த நிதி வழங்கும் நிகழ்வில் மனித வள அமைச்சர் வி.சிவக்குமாரின் பிரதி நிதியாக மலேசிய தொழிற்சங்க பதிவு இலாகாவின் தலைமை இயக்குனர் கமால் பின் பாட்லி நிதியை எடுத்து வழங்கினார்.
அமைச்சரின் உரையை வாசித்து தலைமை இயக்குனர் கமால் பாட்லி, நாட்டிலுள்ள தொழிற்சங்கங்களைச் சார்ந்த கமிட்டி உறுப்பினர்களுக்குப் பயிற்சி வகுப்பு மற்றும் பயிற்சி முகாம்கள் நடத்துவதற்கு ஏதுவாக இந்த நிதி வழங்கப்பட்டதாக கூறினார்.
நிதியைப் பெற்றுக் கொண்ட சிலாங்கூர் மாநில செயளாலர் வை.தாமசேகரன் மற்றும் பேராக் மாநில செயலாளர் மு.குணாசன் இந்த நிதியின் மூலம் தோட்ட தொழிலாளர் சங்க தோட்ட கமிட்டிகளுக்கு அடிப்படை பயிற்சி வழங்கப்படும் என்றனர்.
இந்நிகழ்வில் 189 தொழிற்சங்கங்களுக்கு மொத்தம் 26 லட்சம் வெள்ளி மானியம் வழங்கப்பட்டது. தொழில் துறையில் தொழிலாளர்கள் எதிர் நோக்கும் சவால்களைத் திறம்பட சந்திக்கும் ஆற்றலை வளர்த்துக்கொள்வதற்கு அவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக இந்த மானியம் வழங்கப்பட்டது.

Related News

ஆல்பெர்ட் தே கைது நடவடிக்கை மீதான காணொளியை வெளியிடுவீர்

ஒழுங்கீன நடவடிக்கைகள்: நடப்பு சட்டம் ஆராயப்படும்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரணம் ஒரு கொலையே

அம்பாங்கில் கும்பல் தாக்குதலில் மூவர் காயம்

பிரதமர் தலைமையில் ஏழாவது தேசிய நீர் மன்றக் கூட்டம்


