கோலாலம்பூர், ஆகஸ்ட்.28-
நகர்ப்புற மக்களின் நல்வாழ்வை உறுதிச் செய்யக்கூடிய நகர்ப்புற சீரமைப்புச் சட்ட மசோதாவிற்கு ஆதரவு வழங்காத எதிர்க்கட்சியினரை வீடமைப்பு, ஊராட்சித்துறை அமைச்சர் ங்கா கோர் மிங் கடுமையாகச் சாடினார்.
நகர்ப்புற சட்ட மசோதாவை எதிர்க்கட்சியினர் ஆதரிக்காத காரணத்தினால், அந்தச் சட்ட மசோதா மீதான விவாதம், அடுத்த நாடாளுமன்றக் கூட்டத் தொடருக்கு ஒத்தி வைப்பதற்கு இன்று முடிவு செய்யப்பட்டதாக ங்கா கோர் மிங் குறிப்பிட்டார்.
இந்த உத்தேசச் சட்ட மசோதாவை எதிர்க்கட்சியினர் மட்டுமின்றி ஒற்றுமை அரசாங்கத்தில் ஓர் அங்கமாக விளங்கும் பாரிசான் நேஷனல் எம்.பி.க்கள் சிலரும் கடுமையாக எதிர்ப்பதாக அவர் குறிப்பிட்டார்.








