கோலாலம்பூர், செப்டம்பர்.19-
ரோன்95 வகை பெட்ரோலுக்கு அரசாங்கம் வழங்கும் மானியத்தைப் பொதுமக்கள் அனுபவிக்க வேண்டுமென்றால், தங்களது மைகாட் அட்டையிலுள்ள சிப் சரியாக வேலை செய்கிறதா என சரிபார்த்துக் கொள்ளுபடி உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
எரிபொருள் நிரம்பும் போது, அடையாள சரிபார்ப்பிற்காக மலேசியர்கள் தங்களது மைகாட்களைப் பயன்படுத்த நேரிடும் என்பதால், சேதமடைந்த மைகாட்களை உடனடியாக மாற்றிக் கொள்ளும்படி டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் கூறியுள்ளார்.
மைகாட் சேதமடைந்திருந்தால் அருகிலுள்ள ஜேபிஎன் அலுவலகத்தில் உடனடியாக மாற்றிக் கொள்ளலாம் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
இம்மாத இறுதியில் ரோன்95 பெட்ரோல், லிட்டருக்கு 1.99 காசாக குறையலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.








