Oct 16, 2026
Thisaigal NewsYouTube

ஜோகூரில் ஓன்லைன் மோசடிக் கும்பல் முறியடிப்பு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ஜோகூரில் ஓன்லைன் மோசடிக் கும்பல் முறியடிப்பு

ஜோகூர்பாரு, டிச.4-


ஓன் லைன் மூலமாக சூதாட்டம் மற்றும் வேலை வாய்ப்பு இருப்பதாக கூறி, ஆட்களை ஏமாற்றுதல் முதலிய மோசடி வேலைகளில் ஈடுபட்டு வந்ததாக நம்பப்படும் கும்பல் ஒன்றை ஜோகூர் போலீசார் வெற்றிகரமாக முறியடித்துள்ளனர்.

கடந்த வாரம் ஜோகூர், இஸ்கந்தார் புத்ரியில் தொலைபேசி அழைப்பு மையமாக பயன்படுத்தப்பட்டு வந்த இரண்டு அலுவலகங்களில் போலீசார் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையில் இந்த கும்பல் முறியடிக்கப்பட்டுள்ளதாக ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் கமிஷனர் டத்தோ குமார் முத்துவேல் தெரிவித்தார்.

இதில் தொலைபேசி அழைப்பு மையத்தின் வாயிலாக ஓன்லைன் சூதாட்டம் மற்றும் வேலைக்கு ஆள்சேர்ப்பதாக கூறி மோசடியில் ஈடுபட்டதாக நம்பப்படம் 26 க்கும் 44 க்கும் இடைப்பட்ட வயதுடைய 18 வெளிநாட்டு ஆடவர்களை போலீசார் கைது செய்து இருப்பதாக டத்தோ குமார் குறிப்பிட்டார்.

இந்த மோசடிக்கும்பலை முறியடித்தது மூலம் 27 கைப்பேசிகள், 18 மடிக்கணினிகள், இண்டர்நெட்டுடன் இணைப்பபைக்கொண்டு இருந்த 18 மானிட்டர்கள், 3 மோடம்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக டத்தோ குமார் தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →