கல்லுடைப்பு பணியின் போது மண்வாரி இயந்திரம் குடை சாய்ந்து, பள்ளத்தில் விழுந்ததில் அதனை இயக்கிக்கொண்டிருந்த இரு வங்காளதேசத் தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இச்சம்பவம் நேற்று இரவு 8 மணியளவில் ஈப்போ அருகில் சிம்பாங் பூலாய், கம்போங் கெப்பாயாங், கிராமட் பூலாய் கல்லுடைப்புப் பகுதியில் நிகழ்ந்தது.
அந்தக் கன ரக இயந்திரத்தின் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கிய அந்த இரு வங்காள தேசத்தொழிலாளர்களும், சம்பவ இடத்திலேயே மாண்டனர் என்று சிம்பாங் பூலாய், தீயணைப்பு, மீட்புப்படை நிலையத்தின் செயலாக்கத் தலைவர் முகமட் சப்ரி யோப் முகமட் தெரிவித்தார்.
இது தொடர்பாக இரவு 8.17 மணியளவில், ஓர் அவசர அழைப்பைப் பெற்ற தீயணைப்பு, மீட்புப்படையினர், சம்பவ இடத்திற்கு விரைந்த போது, குடை சாய்ந்த மண்வாரி இயந்திரத்தின் அடியில் அவ்விரு தொழிலாளர்களும் சிக்கி கிடந்தது தெரியவந்ததாக முகமட் சப்ரி குறிப்பிட்டார்.
அந்த கல்லுடைப்பு நிறுவனத்தை சேர்ந்த மற்றொரு கனரக வாகனம் கொண்டு வரப்பட்டு, குடை சாய்ந்த மண் வாரி இயந்திரம் அகற்றப்பட்டு, அவ்விரு தொழிலாளர்களின் உடல்களும் மீட்கப்பட்டன. 30 மற்றும் 40 வயது மதிக்கத்தக்க அவ்விரு தொழிலாளர்களின் உடல்களும் பின்னர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக முகமட் சப்ரி தெரிவித்தார்.

Related News

கூலிமில் இரு கார்கள் மோதி கோர விபத்து: இரு சிறுவர்கள் உட்பட மூவர் பரிதாப பலி!

சிம்மோர் அருகே தென்பட்ட புலி: உடல்நலக் குறைவால் சுங்கை மையத்தில் சிகிச்சை!

யூபிஎஸ்ஆர், பிடி3 தேர்வுகளை மீண்டும் அமல்படுத்த ஜோகூர் மாநில அரசு ஆதரவு!

ஓப்ஸ் நாகா : 5,329 அந்நிய மீனவர்கள் கைது - 203 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்!

தேசிய சேவைப் பயிற்சி 3.0: வருகையை உறுதிப்படுத்தாததால் 254 பயிற்சியாளர்கள் வீடு திரும்ப அறிவுறுத்தல்!


