Jul 1, 2026
Thisaigal NewsYouTube
கூலிமில் 18 வெளிநாட்டுத் தொழிலாளர்கள் கைது
தற்போதைய செய்திகள்

கூலிமில் 18 வெளிநாட்டுத் தொழிலாளர்கள் கைது

Share:

கூலிம் மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் நடத்தப்பட்ட அதிரடிச் சோதனையில், குடிநுழைவு விதிகளுக்குப் புறம்பாக தங்கியிருந்த 18 வெளிநாட்டு ஆடவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொதுமக்களின் தகவல் மற்றும் உளவுத்துறை தரவுகளின் அடிப்படையில், கெடா மாநில குடிநுழைவுத்துறை இந்த ‘OPS MAHIR’ நடவடிக்கையை மேற்கொண்டது. சோதனையிடப்பட்ட 31 பேரில், இந்தோனேசியா, மியான்மர், பாகிஸ்தான் மற்றும் சீனா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 18 பேர் சிக்கினர். இவர்கள் செல்லுபடியாகும் ஆவணங்கள் இன்றி தங்கியிருந்தது மற்றும் சமூகப் பயணப் பாஸை தவறாகப் பயன்படுத்தியது போன்ற குற்றங்களுக்காகக் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட 22 முதல் 45 வயதுடைய அந்த ஆடவர்கள், மேல் விசாரணைக்காகவும் ஆவணப்படுத்தலுக்காகவும் பாலிங் பெலாந்தேயிலுள்ள குடிநுழைவுத் துறை டெப்போவுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

சட்டவிரோத வெளிநாட்டுத் தொழிலாளர்களைப் பணியமர்த்தும் தொழிற்சாலைகள் அதிகம் உள்ள பகுதிகளில் கண்காணிப்பு மற்றும் சோதனைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என கெடா மாநில குடிநுழைவுத்துறைத் தலைவர் முகமாட் ரிட்சுவான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Related News

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி

3 முக்கிய உத்திகளை முன்வைத்து மெங்கிபோல் தொகுதியில் களமிறங்கும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சூ போ யீ

3 முக்கிய உத்திகளை முன்வைத்து மெங்கிபோல் தொகுதியில் களமிறங்கும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சூ போ யீ

பேராக் சுல்தானைத் தாக்க முயன்ற பெண்ணின் மனு நிராகரிப்பு: வழக்கைத் தொடர அரசுத் தரப்பு முடிவு

பேராக் சுல்தானைத் தாக்க முயன்ற பெண்ணின் மனு நிராகரிப்பு: வழக்கைத் தொடர அரசுத் தரப்பு முடிவு

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

சோகம்: மெர்சிங்கில் கார் மோதி குட்டி யானை பலி! கணத்த இதயத்தோடு காவல்காத்த தாய் யானை

சோகம்: மெர்சிங்கில் கார் மோதி குட்டி யானை பலி! கணத்த இதயத்தோடு காவல்காத்த தாய் யானை

பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும்  சிகமாட்  நாடாளுமன்ற உறுப்பினரின் 4 மொழி ஆளுமை

பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும் சிகமாட் நாடாளுமன்ற உறுப்பினரின் 4 மொழி ஆளுமை