கோலாலம்பூர், ஆகஸ்ட்.08-
வரும் அக்டோபர் மாதம் கோலாலம்பூரில் நடைபெறவிருக்கும் ஆசியான் உச்சநிலை மாநாட்டில் உலகில் மிக சக்தி வாய்ந்த 4 தலைவர்கள் கலந்து கொள்ளவிருக்கின்றனர் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று கோடி காட்டினார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சீன அதிபர் ஸி ஜின்பிங், பிரேசில் தலைவர் லூலா டா சில்வா மற்றும் தென் ஆப்பிரிக்கா தலைவர் சிரில் ரம்போசா ஆகியோர் ஆசியான் மாநாட்டில் கலந்து கொள்ளவிருப்பதாக பிரதமர் குறிப்பிட்டார்.
வல்லரசு நாடுகளின் தலைவர்கள் உட்பட பிற நாடுகளின் முக்கியத் தலைவர்கள் கலந்து கொள்ளவிருக்கும் கோலாலம்பூர் ஆசியான் மாநாடு, ஒரு வரலாறு பொதித்த மாநாடாக அமையவிருக்கிறது என்று ஆசியான் தலைருமான டத்தோ ஶ்ரீ அன்வார் குறிப்பிட்டார்.








