Oct 18, 2026
Thisaigal NewsYouTube

சொந்த அண்ணனையே கொன்றதாக ஆடவர் மீது குற்றச்சாட்டு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
சொந்த அண்ணனையே கொன்றதாக ஆடவர் மீது குற்றச்சாட்டு

மஞ்சங் , அக்டோபர் 01-

தனது சொந்த அண்ணனையே கொன்றதாக ஆடவர் ஒருவர், பேரா, மஞ்சங் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.

முகமது கைருல் ஹடாபி முகமட் தைப் என்ற 40 வயதுடைய அந்த ஆடவர், கடந்த செப்டம்பர் 25 ஆம் தேதி அதிகாலை 2.25 மணியளவில் சித்தியவான், தமன் முஹிப்பா -வில் உள்ள ஒரு வீட்டில் தனது சொந்த அண்ணனான 46 வயது முகமது கைருல் ரோட்சுவான் முகமது தைப் என்பவரை கொலை செய்ததாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 40 ஆண்டு சிறை மற்றும் 12 பிரம்படித் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் அந்த நபர் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →