Jul 31, 2026
Thisaigal NewsYouTube
சிகரெட், வேப் இல்லாத ஆரோக்கியமான வாழ்க்கை முறை
தற்போதைய செய்திகள்

சிகரெட், வேப் இல்லாத ஆரோக்கியமான வாழ்க்கை முறை

Share:

சிகரெட், வேப் இல்லாத ஆரோக்கியமான வாழ்க்கை முறை பரப்புரையஒ கல்வி அமைச்சு தொடங்கியுள்ளது. மாணவர்கள் மத்தியில், புகைக்கும் பழக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்தப் பரப்புரையைத் தொடங்கியுள்ளது.

இது குறித்து தகவல் அளித்த கல்வி அமைச்சின் பள்ளிக் கூடப் பிரிவின் துணை இயக்குநர் அஸ்மான் அட்நான் பேசுகயில், எதிர்வரும் 2040இல் புகைக்கும் பழக்கம் இல்லாத நாடாக உருவாக வேண்டும் எனும் அரசாங்கத்தின் கொள்கைக்கு இணங்க இந்த முன்னெடுப்பு அமைகிறது என்றார்.

அண்மையில் மாணவர் ஒருவர் வேப் வகை மின் சிகரெட்டைப் பயன்படுத்தியதைத் தொடர்ந்து உடனடி பக்கவிளைவை எதிர்கொண்டிருக்கிறார். அந்த விவகாரத்தைச் சுட்டிக் காட்டி, இந்தப் பழக்கம் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றார்.

எனவே, இவ்வாறான திட்டம் தொடர்ந்து மேற்கொள்ளப் பட வேண்டும் எனவம் அவர் சொன்னார்.

Related News