Oct 12, 2026
Thisaigal NewsYouTube

பிள்ளைகளின் அனைத்து நடவடிக்கைகளையும் கண்காணிக்க வேண்டும்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பிள்ளைகளின் அனைத்து நடவடிக்கைகளையும் கண்காணிக்க வேண்டும்

லுண்டு, ஏப்ரல்.20-

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் இணையம், சமூக ஊடகங்கள் போன்றவற்றைப் பயன்படுத்துவது உட்பட அவர்களின் அனைத்து நடவடிக்கைகளையும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று மகளிர், குடும்பம், சமூகநல மேம்பாட்டு அமைச்சர் டத்தோ ஶ்ரீ நன்சி ஷுக்ரி வலியுறுத்தினார். சிறுவர்களும் இளைஞர்களும் ஆரோக்கியமற்றச் செயல்களிலோ அல்லது தகாத நடத்தைகளிலோ ஈடுபடுவதைத் தடுக்க இஃது அவசியம். தற்போதையச் சட்ட அமலாக்கம் இந்தப் பிரச்சனையைக் கட்டுப்படுத்தப் போதுமானதாக இல்லை என்பதால், குடும்ப அமைப்பிலிருந்தே இந்த விழிப்புணர்வு தொடங்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

வீட்டிலோ அல்லது வெளியிலோ குழந்தைகள் என்ன செய்கிறார்கள் என்பதை அறிந்து கொள்வது பெற்றோர்களுக்குக் கட்டாயமாகிவிட்டது. குழந்தைகள் எப்போதும் கைப்பேசியில் மூழ்கியிருந்தால், பெற்றோருக்கு இஃது ஒரு சவாலாக இருக்கும், மேலும் அவர்கள் தங்கள் குழந்தைகளிடம் கண்டிப்பான அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும். வீட்டில் இருந்து கிடைக்கும் நல்லொழுக்கப் போதனைகள் குழந்தைகளின் நடத்தையையும் சமூகத்துடனான அவர்களின் தொடர்பிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். சமூகத்திற்குப் புறம்பான செயல்களில் இளைஞர்கள் ஈடுபடுவதைத் தடுக்க பள்ளிகளில் பாலியல் கல்வி போன்ற சமூகக் கல்விக்கு புதிய அணுகுமுறைகள் தேவை என்றும் அவர் குறிப்பிட்டார். பாலியல் கல்வி இன்னும் நாட்டில் ஒரு "தடை"யாகக் கருதப்படுவதால், இது ஒரு முக்கியமான கல்வி மதிப்பாகக் கற்பிக்கப்பட வேண்டும், இதில் பெற்றோர்களும் பங்கேற்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
கோலாலம்பூரில் இரண்டாவது கூட்டு சிசிடிவி கட்டுப்பாட்டு மையம்: டிபிகேஎல், போலீஸ் துறை ஆலோசனை

கோலாலம்பூரில் இரண்டாவது கூட்டு சிசிடிவி கட்டுப்பாட்டு மையம்: டிபிகேஎல், போலீஸ் துறை ஆலோசனை

கோலாலம்பூர் வணிக வளாகத்தில் பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகப் புகார்: சந்தேக நபரைத் தேடும் போலீஸ் துறை

கோலாலம்பூர் வணிக வளாகத்தில் பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகப் புகார்: சந்தேக நபரைத் தேடும் போலீஸ் துறை

புகைமூட்டம்: மாணவர்கள் உடல்நலனில் கவனம் செலுத்த வேண்டும் – கல்வி அமைச்சர் ஃபாட்லீனா சீடேக் வலியுறுத்தல்

புகைமூட்டம்: மாணவர்கள் உடல்நலனில் கவனம் செலுத்த வேண்டும் – கல்வி அமைச்சர் ஃபாட்லீனா சீடேக் வலியுறுத்தல்

சபாவில் இளைஞரைத் தலைக்கவசத்தால் தாக்கிய சம்பவம்: 29 வயது சந்தேக நபர் கைது

சபாவில் இளைஞரைத் தலைக்கவசத்தால் தாக்கிய சம்பவம்: 29 வயது சந்தேக நபர் கைது

டாக்ஸி, பள்ளிப் பேருந்து ஓட்டுநர்களுக்கு ரிங்கிட் 1,000 உதவி: அக்டோபர் 14 முதல் விநியோகம்

டாக்ஸி, பள்ளிப் பேருந்து ஓட்டுநர்களுக்கு ரிங்கிட் 1,000 உதவி: அக்டோபர் 14 முதல் விநியோகம்

பெர்லிஸ் எல்லையில் சட்டவிரோதமாக ஊடுருவும் 25 ரகசியப் பாதைகள் கண்டுபிடிப்பு: நாடாளுமன்றத்தில் தகவல்

பெர்லிஸ் எல்லையில் சட்டவிரோதமாக ஊடுருவும் 25 ரகசியப் பாதைகள் கண்டுபிடிப்பு: நாடாளுமன்றத்தில் தகவல்