இன்று காலையில் நாடாளுமன்றக்கூட்டத் தொடரில் எதிர்கட்சி எம்.பி.க்கள் யாரும் கலந்து கொள்ளாததை, பெரிக்காத்தான் நேஷனல் எம்.பி. ஒருவர் தற்காத்து பேசினார்.
ஷரியா சட்டங்களுக்கு சவால் விடும் வகையில் மாதுவும், அவரின் மகளும் தொடுத்துள்ள வழக்கு தொடர்பில் புத்ராஜெயா நீதித்துறை கட்டடத்தின் முன் ஏற்பாடு செய்யப்பட்ட ஆட்சேப பேரணியில் கலந்து கொண்டவர்களுக்கு தார்மீக ஆதரவை நல்குவதற்காக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அவ்விடத்தில் இருந்தனர் என்று பெரிக்காத்தான் நேஷனல், ஆராவ் எம்.பி. ஷஹிடான் காசிம் தெரிவித்தார்.
நாடாளுமன்றக் கூட்டத்தில் எதிர்கட்சி எம்.பி.க்கள் இல்லாதது குறித்து சாடியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் , தாம் பிரயோகித்த வார்த்தையை மீட்டுக் கொள்ளவில்லை என்றால் நாடாளுமன்ற ஒழுங்கு நடவடிக்கை முன் நிறுத்தப்படும் என்று ஷஹிடான் காசிம் எச்சரித்தார்.








