Jun 30, 2026
Thisaigal NewsYouTube
4 மைகார்ட் அட்டகளைப் பயன்படுத்தி RON95 பெட்ரோல் வாங்கிய நபர் கைது
தற்போதைய செய்திகள்

4 மைகார்ட் அட்டகளைப் பயன்படுத்தி RON95 பெட்ரோல் வாங்கிய நபர் கைது

Share:

கிளந்தான் மாநிலத்தில், நான்கு மைகார்ட் அடையாள அட்டைகளை பயன்படுத்தி 100 லிட்டருக்கு மேற்பட்ட RON95 பெட்ரோலை வாங்க முயன்றதாக சந்தேகத்தின் பேரில் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இது குறித்து அம்மாநில போலீஸ் தலைவர் யூசோப் மாமட் கூறுகையில், சந்தேக நபர் தும்பட் பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தில் பெட்ரோல் வாங்கிக் கொண்டிருந்த போது கைது செய்யப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், இவ்வழக்கானது உள்நாட்டு வணிகம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சந்தேக நபர் மீது 1959 -ஆம் ஆண்டின் தேசிய பதிவு சட்டத்தின் கீழும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Related News